மிஷன் சக்தி வெற்றி.. விண்வெளி துறையில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்

தொழில்நுட்பம்
Updated Mar 27, 2019 | 15:33 IST | Times Now

விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: Times Now

டெல்லி: செயற்கை கோளை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' என்ற சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று நண்பகல் 11.45 மணி முதல் 12 மணி வரை உரையாற்ற இருக்கிறேன். அப்போது ஒரு முக்கிய தகவல் ஒன்றை சொல்ல உள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி எதைப் பற்றி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்தது. 

பிரதமர் மோடி ஆற்றிய உரையில், "  விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா இன்று மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும்  'மிஷன் சக்தி' என்ற சோதனையை 3 நிமிடங்களில் இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தச் சோதனையை இந்தியா 4-வது நாடாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.  

ஏ- சாட் எனப்படும் செயற்கை கோள்களை பாதுகாக்கும் வகையில் பூமியில் இருந்து குறைந்த நீள்வட்ட பாதையில் அதாவது 300. கி.மீ தொலைவில்  செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இன்றைய நாள், இந்தியா விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.  இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி துறையின் மூலம் இது சாத்தியப்பட்டது. இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை எந்த நாட்டுக்கும் எதிரானது கிடையாது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

NEXT STORY
மிஷன் சக்தி வெற்றி.. விண்வெளி துறையில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேற்றம் - பிரதமர் மோடி பெருமிதம் Description: விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola