Lenovo K10 Plus ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது

தொழில்நுட்பம்
Updated Sep 23, 2019 | 16:41 IST | Times Now

கிரேடியண்ட் எனப்படும் வண்ணக்கலவையான வடிவமைப்பில் காட்சிதரும் லெனோவோ K10 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வசதி உள்ளது.

Lenovo K10 Plus
Lenovo K10 Plus 

லெனோவோ K10 ப்ளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. ப்லிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.10,999 மதிப்புள்ள இந்த போன் அறிமுகப்படுத்தப்படுகிறது. செப்டம்பர் 30 முதல் இந்த போன் விற்பனைக்கு வரும். 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பு வசதி கொண்ட இந்த போன் கருப்பு, ஸ்ப்ரைட் என இரு நிறங்களில் வருகிறது. ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டு இந்த போன் இயங்கும்.

கிரேடியண்ட் எனப்படும் வண்ணக்கலவையான வடிவமைப்பில் காட்சிதரும் லெனோவோ K10 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வசதி உள்ளது. 13 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் திறன் கொண்ட மூன்று கேமராக்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கேமராவாக இவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மெகாபிக்சல் கேமராவை கொண்டு அல்ட்ரா வைட் புகைப்படங்கள் எடுக்கலாம். அதேபோல, 5 மெகாபிக்சல் கேமரா கொண்டு போர்ட்ரெய்ட் புகைப்படங்கள் எடுக்கலாம். இவை தவிற, முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி படைத்த இதன் கேமராவில் ஸ்லோ மோஷன் வீடியோவும் பதிவு செய்யலாம். 

4,050 mAh மின்கலம் கொண்டு இயங்கும் இந்த போன் 10W சார்ஜருடன் வருகிறது. 6.22 அங்குலத்தில் மேக்ஸ் விஷன் எனப்படும் பெரிய திரை கொண்ட இந்த போன், எட்டு கோர் மற்றும் 1.8 Ghz வேகம் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 புராசசர் கொண்டு இயங்குகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...