நிலவில் சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் உடையாமல் கண்டெடுப்பு!

தொழில்நுட்பம்
Updated Sep 09, 2019 | 14:57 IST | Times Now

சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடையாத நிலையில் இருக்கும் லேண்டரில் எந்தவித சேதமும் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே அதனுடன் தொடர்பு ஏற்படுத்துவது சாத்தியமாகும்.

Chandrayaan 2, சந்திரயான் 2
சந்திரயான் 2 

பெங்களூரு: திட்டமிட்ட இடத்திற்கு அருகிலேயே லேண்டர் விக்ரம் உடையாமல் தரையிரங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தில் சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் தென்பட்டதாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லேண்டர் விக்ரம் உடன் தொடர்புகொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் வாழ்நாள் ஒரு நிலவு தினமாகும். நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமம்.

”லேண்டரின் பாகங்கள் அனைத்தும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே அதனுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த முடியும். வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மெதுவாக தரையிறங்கி அனைத்து பாகங்களும் சீராக செயல்பட்டால் மட்டுமே தொடர்பு ஏற்படுத்துவது சாத்தியமாகும். தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன,” என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறியதாவது: தொடர்பு ஏற்படுத்த நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். சில தடைகள் உள்ளன. தொடர்பு துண்டிக்கப்பட்ட விண்கலத்தை தொடர்புகொண்ட அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால், விக்ரம் பொருத்தவரை அது சற்று கடினம். ஏற்கனவே அது நிலவின் தரையில் இருப்பதால் அதனுடன் இணைப்பு ஏற்படுத்த முடியாது. ஆர்பிட்டர் அல்லது பூமியில் உள்ள மையத்தை நோக்கி ஆண்டெனாக்கள் இருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் கடினம். அதே சமயம், வாய்ப்புகள் நன்றாக உள்ளன; நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...