இனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம்!

தொழில்நுட்பம்
Updated Oct 09, 2019 | 19:11 IST | Times Now

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த கட்டணமானது IUC அகற்றப்படும் வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனி ஜியோவில் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம்,Jio to charge 6 paise per minute for outgoing calls
இனி ஜியோவில் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம்   |  Photo Credit: PTI

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்றொரு நெட்வொர்க்குக்கு வாடிக்கையாளருக்கு கால் செய்தால் வாடிக்கையாளர் அவுட்கோயிங் கால் செய்யும் அந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கட்டணம் வழங்கவேண்டும். இந்த கட்டணத்திற்கு Interconnect Usage Charges (IUC) என்று பெயர். இந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் TRAI தற்போது நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணத்தை முற்றிலும் அகற்ற கோரி ஜியோ நிறுவனம் கூறிவருகிறது.

இந்த IUC நடைமுறை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்தான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் இழப்பை சந்தித்து வந்த ஜியோ இதுவரை அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்காத நிலையில் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கவுள்ளது. இது ஜியோவில் இருந்து வேறு எந்த நெட்வொர்க்குக்கு கால் செய்தாலும் பொருந்தும். ஜியோவில் இருந்து ஜியோவுக்கோ அல்லது லேண்ட்லைனுக்கோ கால் செய்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.

 

 

இதற்க்காக ஜியோ புதிதாக IUC பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. போஸ்ட்பேய்ட் வாடிகையாளர்களுக்கு தங்களது பில்லுடன் மொத்தமாக இது வசூலிக்கப்படும். மேலும் இந்த கட்டணமானது IUC அகற்றப்படும் வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
        

      

 


  
     

NEXT STORY