இதெல்லாம் உங்க லவ்வர்ட்ட காமிச்சுடாதீங்க - ப்ரப்போஸ் செய்ய 7000 கி.மீ பயணம் செய்த ஜப்பான் இளைஞர்!

தொழில்நுட்பம்
Updated Apr 13, 2019 | 22:20 IST | Times Now

உலகின் அதிக நீளம் பயணித்து உருவாக்கப்பட்ட ஜி,பி.எஸ் ஆர்ட் இதுதானாம்.

Japanese Man Yassan Takahashi create Marry me gps art to propose
Japanese Man Yassan Takahashi create Marry me gps art to propose  |  Photo Credit: Twitter

காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் இளைஞர்கள். நம்ம ஊரில் சரி. உலகம் முழுவதுமா இப்படியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறதா? இந்த ஜப்பான் காதல் கதையைக் கேட்டால் நம்ம இளைஞர்களுக்கு "இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் யாஸ்ஸன் டகாஹஷி. இவருக்கு நாட்சுகி என்ற பெண்ணின் மீது காதல். சும்மா பிரபோஸ் செய்தால் போதுமா? தன் காதலி ஸ்பெஷல் ஆயிற்றே என நினைத்தவர் அதற்காக கூகுளின் உதவியை நாடினார். கூகுளின் உதவி என்றால் சர்ச் செய்வதில்லை. இது வேறு விஷயம். ஜி.பி.எஸ் ஆர்ட். ஜி.பி.எஸ் மூலம், நாம் எங்கெல்லாம் பயணம் செய்கிறோமோ அந்தப் பாதையை மேப்பில் பார்க்கலாம். கொஞ்சம் திட்டமிட்டு பயணித்தால் நாம் செல்லும் பாதை சொற்களாக மாற்றலாம். ஏற்கெனவே உலகம் முழுவதும் பலர் இதை செய்திருக்கிறார்கள். இதுதான் நமக்கு சரியான வழி என முடிவு செய்த யாஸ்ஸன், Marry me என்பதன் அருகில் ஒரு இதயமும் அதிலொரு அம்பும் விடுவது போல ஒரு மேப் தயார் செய்தார். முடிவில், அதன் மொத்த நீளம் 7000 கி.மீ வந்தது. பரவாயில்லை என முடிவு செய்தவர் வேலையை விட்டார். தன் காரில் பயணம் கிளம்பிவிட்டார். "இவன் எதுக்கு இப்ப கிளம்பறான்? நம்மள கழட்டி விடப்போறான் போல " என நினைத்த நாட்சுகிக்கு கிடைத்தது வாழ்வின் மிகப்பெரிய சர்ப்ரைஸ். தான் செய்த வேலையை மேப்பில் காட்ட, உருகி போனார் நாட்சுகி. இந்தப் பயணம் முழுவதும் காரிலே இருந்திருக்கிறார் யாஸ்ஸன். இரவு தூங்குவது கூட காரில்தான். 

உலகின் அதிக நீளம் பயணித்து உருவாக்கப்பட்ட ஜி,பி.எஸ் ஆர்ட் இதுதானாம். கின்னஸிலும் இடம் பிடிக்கப் போகிறார் யாஸ்ஸன். கூகுளும் யாஸ்ஸனின் காதல்கதையைக் கேட்டு அதை ஷேர் செய்திருக்கிறது. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது இந்தக் காதல் ஜோடி. 

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் 
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்

பாவேந்தர் சொன்னது உண்மைதான் போலும்.

NEXT STORY
இதெல்லாம் உங்க லவ்வர்ட்ட காமிச்சுடாதீங்க - ப்ரப்போஸ் செய்ய 7000 கி.மீ பயணம் செய்த ஜப்பான் இளைஞர்! Description: உலகின் அதிக நீளம் பயணித்து உருவாக்கப்பட்ட ஜி,பி.எஸ் ஆர்ட் இதுதானாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola