[வீடியோ] ஆற்றில் விழுந்து 15 மாதங்களுக்கு பின்பும் வேலை செய்த ஐஃபோன்!

தொழில்நுட்பம்
Updated Oct 01, 2019 | 16:43 IST | Times Now

யூடியூப் கலைஞரான மைக்கல் பென்னெட் என்பவர் எடிஸ்டோ நதிப்படுகையில் ஐஃபோன் ஒன்று நீர்புகாத பைக்குள் இருப்பதை கண்டறிந்தார்.

iPhone found in Edisto riverbed, நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட ஐஃபோன்
நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட ஐஃபோன்  |  Photo Credit: YouTube

அமெரிக்கா: ஆற்றில் மூழ்கிய ஐஃபோன் ஒன்று 15 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டதில், அது வேலை செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கரோலினாவில் உள்ள எடிஸ்டோ நதியில் ஐஃபோன் ஒன்று 2018 ஜூன் 19-ல் தவறவிடப்பட்டது. தற்போது மீட்கப்பட்டுள்ள அந்த ஐஃபோன் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது.

யூடியூப் கலைஞரான மைக்கெல் பென்னெட் என்பவர் எடிஸ்டோ நதிப்படுகையில் ஐஃபோன் ஒன்று நீர்புகாத பைக்குள் இருப்பதை கண்டறிந்தார். ஐஃபோனை கரைக்கு கொண்டுவந்ததும் அது வேலை செய்வதை கண்டு வியந்தார். பாஸ்வேர்டு தெரியாததால் ஐஃபோனை திறக்கமுடியாமல் போனது. இதனால், அதன் உரிமையாளர் குறித்த விவரங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சிம் கார்டை கழற்றி வேறு போனில் பொருத்தி உரிமையாளரின் விவரத்தை கண்டறிந்தார் மைக்கல் பென்னெட்.

போனின் உரிமையாளர் எரிக்கா பென்னெட் என்று தெரியவந்தது. ஐஃபோனை பெற்றுக்கொண்ட எரிக்கா பென்னெட் அது வேலை செய்வதை கண்டு ஆனந்தத்தில் திளைத்தார். எரிக்கா பென்னெட் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் சென்றபோது எடிஸ்டோ நதியில் 19 ஜூன் 2018 அன்று தனது ஐஃபோனை தவறவிட்ட நிலையில் 15 மாதங்கள் நதிப்படுகையில் அது இருந்துள்ளது.

 

 

தந்தை அனுப்பிய குறுஞ்செய்திகள் அந்த ஐஃபோனில் இருந்ததால் போனை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டார் எரிக்கா பென்னெட். இறுதியாக தந்தையர் தினத்தன்று தனது ஐஃபோன் மூலம் அவரிடம் பேசியதாக தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் எரிக்கா பென்னெட் நினைவுகூர்ந்தார்.

NEXT STORY