வெளியானது ஐஃபோன் 11: இந்திய விலை என்ன தெரியுமா?

தொழில்நுட்பம்
Updated Sep 11, 2019 | 17:20 IST | Times Now

இந்தியச் சந்தையில் புதிய ஐஃபோன் 11 ரக போன்களின் விலை தற்போது வெளியாகியுள்ளது.

iPhone 11, ஐஃபோன் 11
ஐஃபோன் 11 

புதிய ஐஃபோன் 11 ரக போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கலிஃபோர்னியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ, ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்கள் அறிமுகமாயின. அவற்றுடன், ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 5, ஆப்பிள் டிவி+, ஏழாம் தலைமுறை ஐபேட் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியச் சந்தையில் புதிய ஐஃபோன் 11 ரக போன்களின் விலை தற்போது வெளியாகியுள்ளது. 64GB சேமிப்பு வசதியுடன் கூடிய ஐஃபோன் 11-ன் விலை ரூ.64,000, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்களின் விலை முறையே ரூ.99,000 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 முதல் ஐஃபோன் 11 ரக போன்களுக்கான முன்பதிவு தொடங்கும், செப்டம்பர் 27 முதல் விற்பனைக்கு வரும்.

முன்னதாக, செப்டம்பர் 20-ஆம் தேதி ஐஃபோன் 11 ரக போன்கள் விற்பனைக்கு வரும் என அறிவித்த ஆப்பிள் நிறுவனம், பின்னர் அம்மாதம் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்களில் 12 மெகாபிக்சல் சென்சாருடன் அல்ட்ரா வைட் லென்ஸ், வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை கொண்ட மூன்று கேமரா வசதி உள்ளது.

ஐஃபோன் 11 ரக போன்களில் 4 முதல் 5 மணிநேரம் கூடுதலாக நிடித்து உழைக்கும் பேட்டரிகள் உள்ளன. ஐஃபோன் 11-ல் 6.11 அங்குல திரையும், ஐஃபோன் 11 ப்ரோவில் 5.8 அங்குல திரையும், ஐஃபோன் 11 ப்ரோ மேக்சில் 6.5 அங்குல திரையும் உள்ளது.

NEXT STORY
வெளியானது ஐஃபோன் 11: இந்திய விலை என்ன தெரியுமா? Description: இந்தியச் சந்தையில் புதிய ஐஃபோன் 11 ரக போன்களின் விலை தற்போது வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...