ஐஃபோன் 11 சீரிஸ், புதிய சேவைகள் அறிமுகம் - முழு விவரம்

தொழில்நுட்பம்
Updated Sep 11, 2019 | 11:04 IST | Times Now

இரட்டை கேமரா வசதியுடன் கூடிய ஐஃபோன் 11 வெளியானது. மேலும், மூன்று கேமரா வசதியுடன் கூடிய ஐஃபோன் 11 ப்ரோ, ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவையும் அறிமுகமாயின.

Apple iPhone 11, ஆப்பிள் ஐஃபோன் 11
ஆப்பிள் ஐஃபோன் 11 

ஆப்பிள் ஐஃபோன் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக, ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 5 மாடல்கள் மற்றும் ஆப்பிள் டிவி+ உள்ளிட்ட சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கலிஃபோர்னியா நகரில், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரட்டை கேமரா வசதியுடன் கூடிய ஐஃபோன் 11 வெளியானது. மேலும், மூன்று கேமரா வசதியுடன் கூடிய ஐஃபோன் 11 ப்ரோ, ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவையும் அறிமுகமாயின.

ஐஃபோன் 11 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்

ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.5 அங்குல திரையும், ப்ரோ மாடலில் 5.8 அங்குல திரையும் உள்ளது. இரண்டு ஃபோன்களிலும் A13 பயானிக் சிப்செட் உள்ளது. மேலும், 4-5 மணிநேரம் கூடுதலாக நீடித்து உழைக்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒயிடு ஆங்கிள், டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ரா ஒயிடு லென்ஸ் உடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

டோல்பை, ஆட்மோஸ், டோல்பை விஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் HDR10 ஆகிய வசதிகளை ஐஃபோன் 11 ப்ரோவில் பயன்படுத்தலாம். டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் மூலம் ஒரே கிளிக்கில் 9 புகைப்படங்கள் எடுக்கமுடியும். இதில், ஷட்டர் கிளிக் செய்யும் முன்னே 4 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுவிடும்.

ஐஃபோன் 11

6.11 அங்குல திரை கொண்ட ஐஃபோன் 11, டோல்பை அட்மோஸ் ஒலி வடிவ வசதியுடன் வருகிறது. அல்ட்ரா ஒயிடு லென்சுடன் 12 மெகாபிக்சல் கேமரா கொண்ட இந்த ஃபோன், 4k 60 fps ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் வீடியோ எடுக்கும் வசதியுடன் கூடியதாகும். 

ஆப்பிள் டிவி+

OTT தளத்தில் நுழையும் முயற்சியாக ஆப்பிள் டிவி+ எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளார் டிம் குக். அப்போது, ’தி மார்னிங் ஷோ’ எனும் நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதே போல ஜேசன் மாமோ படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இதனை ஆப்பிள் டிவி+ சேவையில் மட்டுமே பிரத்யேகமாக காண முடியும். நவம்பர் 1 முதல் இச்சேவை பயன்பாட்டுக்கு வரும்.

இதே போல, 10.2 அங்குல திரையுடன் 7th  ஜெனரேஷன் ஆப்பிள் ஐபேட், கேம் சேவையான ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஆகியவை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...