இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள்: பட்டியலில் இடம்பிடித்த கோலி, ப்ரியங்கா! - எவ்வளவு தெரியுமா?

தொழில்நுட்பம்
Updated Jul 25, 2019 | 15:11 IST | Times Now

உலகம் முழுவதில் இருந்தும் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் யார் என்றப் பட்டியல் இந்தியாவைச் சேர்ந்த ப்ரியங்கா சோப்ராவும் விராட் கோலியும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

Priyanka Chopra and Virat Kohli
Priyanka Chopra and Virat Kohli   |  Photo Credit: Instagram

முன்பு பிரபலங்கள் தங்களது பிரபல தன்மையை வைத்து விளம்பரங்களில் நடித்து அதன் மூலமாக சம்பாதிப்பார்கள். ஆனால் இப்போது விளம்பரப்படம் மட்டுமில்லாமல் சமூக வலை தளங்கள் அனைத்திலும் தங்களது ரசிகர்களிடம் பிராண்டுகளை விளம்பரம் செய்து சம்பாதிக்கிறார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் ஒரு பிராண்டை பற்றிப் பதிவிட இவ்வளவு ரூபாய் என்று சம்பாதிக்கும்  பிரபலங்களின் பட்டியலை ஹாப்பர் ஹச்க்யூ வலைத் தளம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் நபர்களைக் கணக்கில்கொண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியாவில் இருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அவர்கள் நடிகை பிரியங்கா சோப்ராவும், விளையாட்டு வீரர் விராட் கோலியும்தான். பிரியங்கா சோப்ரா 19 ஆவது இடம் பிடிக்க  விராட் கோலி 23வது இடம் பிடித்திருக்கிறார்.  சரி அப்படி மூலம் எவ்வளவு தான் சம்பாதிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

அதிகமில்லை பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு 1 கோடியே 86 லட்சம் ரூபாய் வாங்குகிறார். கோலி ஒரு பதிவுக்கு ஒ1 கோடியே 35 லட்ச ரூபாய் வாங்குகிறார்.  பிரியங்கா பல்வேறு அழகு சாதன சாதனப் பொருட்களை பிராண்டிங் செய்ய விராட் கோலி பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் டிவி நட்சத்திரம் கெய்லி ஜென்னர் இடம் பிடித்திருக்கிறார். இவர் ஒரு பதிவுக்கு சுமார் 87 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் சம்பளமாக வாங்குகிறார். பிரியங்காவுக்கு 4.3 கோடி ஃபாலோவர்களும் கோலிக்கு 3.8 கோடி ஃபாலோவர்களும் இருக்கிறார்கள். 

 

 

NEXT STORY
இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள்: பட்டியலில் இடம்பிடித்த கோலி, ப்ரியங்கா! - எவ்வளவு தெரியுமா? Description: உலகம் முழுவதில் இருந்தும் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் யார் என்றப் பட்டியல் இந்தியாவைச் சேர்ந்த ப்ரியங்கா சோப்ராவும் விராட் கோலியும் இடம்பிடித்திருக்கிறார்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...