ஹூவாய் நிறுவனத்தின் புதிய வகை அதிநவீன வயர்லெஸ் ஹெட்ஃபோன் அறிமுகம்- விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

தொழில்நுட்பம்
Updated Mar 28, 2019 | 12:05 IST | Times Now

ஹூவாய் நிறுவனம் பாரிசில், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உட்பட பல புதிய தயாரிப்புகளை வெளியிட்டது.

Huawei Freelace wireless earphones launched, ஹவாய் நிறுவனத்தின் புதிய வகை அதிநவீன வயர்லெஸ் ஹெட்ஃபோன் அறிமுகம்
Huawei Freelace wireless earphones   |  Photo Credit: Times Now

ஹூவாய்நிறுவனம் செவ்வாய் அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, இதில் ஹவாய் P30, P30 ப்ரோ, GT செயல்திறன் கொண்ட வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உட்பட பல புதிய தயாரிப்புகளை வெளியிட்டது. 'ஃப்ரீலேஸ்' என்று அழைக்கப்படும் ஹெட்ஃபோன்கள் குறிப்பாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்ஃபோன்களை உங்கள் ஸ்மார்ட்போனில் பொருத்தி எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட USP வகை- C போர்ட் மற்றும் 9.2mm டைனமிக் இயக்கி அலகு கொண்டுள்ளது

ஹூவாய் ஃப்ரீலேஸ் ஹெட்ஃபோன்களின் விலை 99 யூரோவாக அமைந்துள்ளது, இது இந்திய மதிப்பீட்டில் ரூபாய் 7,700 ஆகும். இது நான்கு பிரகாசமான வண்ணங்களான கிராஃபைட் கறுப்பு, எமரால்டு பசுமை, ஆம்பர் சன்ரைஸ் மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

ஹூவாய் ஃப்ரீலேஸ் குறிப்புகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்;

ஹூவாய் ஃப்ரீலாஸ் மேலே குறிப்பிட்டுள்ளபடி 9.2 மிமீ டைனமிக் இயக்கி அலகுடன், தோள்பட்டை மீது எளிதாக பொருந்தும் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், சுலபமாக எடுத்துச்செல்லவும், அணிவதற்கு வசதியாகவும் இருக்கும்.

இது 27 கிராம் எடையும், 837 மிமீ மொத்த நீளமும், 788 மிமீ கேபிள் நீளமும் கொண்டது. கூகிள் அசிட்டண்ட் செயல்படுத்துவதற்கான அம்சத்துடன் சிலிகான் கேபிள் மீது பவர் மற்றும் சப்தத்தை அதிகரிக்கும் பொத்தான்கள் உள்ளன. மேலும், இது அலுமினிய கலவையால் செய்யப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு இதில் உள்ளது. இதன் வயர்லெஸ் ப்ளூடூத் இணைப்பை எந்த தொந்தரவும் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனுடன் சாதனத்தை சிரமமின்றி இணைக்க முடியும். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனும் இந்த ஹெட்ஃபோன்களை சாதரணமாக பொருத்துவதன்மூலமே இணைக்கலாம்.

ஹெட்ஃபோன் பயன்பாட்டில் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய உள்ளமைக்கப்பட்ட ஹால் காந்த சென்சார் உள்ளது. இது தண்ணீர் புகாமல் இருப்பதற்கான IPX5 ரக தரவரிசையைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஒரு தெளிவான மற்றும் வெளிப்புற சத்தம் இல்லாத அனுபவத்திற்காக ஒரு சத்தம் ரத்துசெய்தல் அமைப்பு மூலம் இரட்டை சேனல் காற்று ஒலி குறைப்பு உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, 120 mAh திறன் கொண்டது, இது 18 மணிநேர இடைவிடாமல் செயல்படும் வகையிலும், 4 மணிநேர ஆடியோ கேட்கும் வசதியை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
ஹூவாய் நிறுவனத்தின் புதிய வகை அதிநவீன வயர்லெஸ் ஹெட்ஃபோன் அறிமுகம்- விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்! Description: ஹூவாய் நிறுவனம் பாரிசில், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உட்பட பல புதிய தயாரிப்புகளை வெளியிட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola