ஏன், எதற்கு, எப்படி, எதனால் டிக்டாக் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது தெரியுமா?

தொழில்நுட்பம்
Updated Apr 17, 2019 | 14:50 IST | விபீஷிகா

ஏற்கனவே டிக்டாக் ஆப் வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். அப்படியென்றால் ஏன் இந்தத் தடை, எத்தனை நாள் தடை?

tiktok ban
டிக்டாக் தடை  |  Photo Credit: Representative Image

உச்சநீதிமன்றம் பரிந்துரையை அடுத்து இந்தியாவில் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஆப் வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்த முடியும், அப்படியென்றால் ஏன் இந்தத் தடை, எத்தனை நாள் தடை?

15 நாட்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் டிக்டாக் ஆப் குழந்தைகளையும் பெண்களையும் தவறானப் பாதைக்கு அழைத்துச்செல்கிறது. இதுவரை இந்த செயலியால் நூற்றுக்கக்கானவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இதனை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று பொதுநல வழக்குப் போடப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம், இந்த ஆப்பை ப்ளேஸ்டோர்களில் இருந்து நீக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  தொலைக்காட்சிகளில் எந்தக்காரணத்தைக் கொண்டும் டிக்டாக் வீடியோக்களை ஒளிபரப்பக்கூடாது என்று  தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் பதில் அளிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது. 

இந்த வழக்கை ஏற்ற உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்தது. அப்போது சீன நிறுவனமான டிக்டாக் சார்பாகவும் வழக்கறிஞர் ஆஜாரனார். வாதத்தில் டிக்டாக் செயலியை காண்காணித்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தடையை நீக்கக்கோரியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், மத்திய அரசு சார்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியதோடு தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை டிக்டாக் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்தும் நீக்கவேண்டும் என்றும் தெரிவித்தது.

இதனை ஏற்ற கூகுளும் ஆப்பிளும் தங்களது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கிவிட்டன. இதனால் புதிதாக யாரும் டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய இயலாதே தவிர ஏற்கனவே ஆப் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. 22-ஆம் தேதி வரும் தீர்ப்பைப் பொருத்து டிக்டாக் ஆப் மீண்டும் இயக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும். ஏற்கனவே இந்தோனேஷியாவிலும் பங்களாதேஷிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட புதுடெல்லியில் நிஜ துப்பாக்கியில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் டிக்டாக் செய்தபோது துப்பாக்கி சுட்டு உயிரிழந்தார்.

 

NEXT STORY
ஏன், எதற்கு, எப்படி, எதனால் டிக்டாக் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது தெரியுமா? Description: ஏற்கனவே டிக்டாக் ஆப் வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். அப்படியென்றால் ஏன் இந்தத் தடை, எத்தனை நாள் தடை?
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola