விளம்பரத் தொல்லை: ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியது கூகுள்

தொழில்நுட்பம்
Updated Aug 17, 2019 | 16:39 IST | Times Now

AndroidOS_Hidenad.HRXH என்று கண்டறியப்பட்டுள்ள அந்த ஆட்வேர், மூடுவதற்கே சிரமப்படும் வகையிலான விளம்பரங்களை ஆண்ட்ராய்ட் சாதனங்களில் திரையிடும்.

Google removes 85 adware apps, 85 ஆட்வேர் செயலிகளை நீக்கியது கூகுள்
85 ஆட்வேர் செயலிகளை நீக்கியது கூகுள்  |  Photo Credit: IANS

சான் பிரான்சிஸ்கோ: ஆட்வேர் (adware) எனப்பட்டும், செயலிகளிக்குள் ஒளிந்திருந்து விளம்பரங்களை திரையிடும் மென்பொருள் கூகுள் ப்ளேச்டோரில் இருக்கும் 85 செயலிகளில் இருப்பதை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, கூகுள் நிறுவனம் அந்த செயலிகளை ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

AndroidOS_Hidenad.HRXH என்று கண்டறியப்பட்டுள்ள அந்த ஆட்வேர், மூடுவதற்கே சிரமப்படும் வகையிலான விளம்பரங்களை ஆண்ட்ராய்ட் சாதனங்களில் திரையிடும். இந்த ஆட்வேர் புதைந்துள்ள பெரும்பாலான செயலிகள் புகைப்படம் அல்லது விளையாட்டு செயலிகள் போல சித்தரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

ஆட்வேரால் பாதிக்கப்பட்டுள்ள 85 செயலிகளில் சூப்பர் செல்ஃபி, கோஸ் கேமரா, பாப் கேமரா, ஒன் ஸ்ட்ரோக் லைன் பசில் போன்ற பிரபலமான செயலிகளிலும் அடங்கும். ஆட்வேர் புதைந்துள்ள செயலிகள் இதுவரை 80 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

வெவ்வேறு கணக்குகளில் இருந்து ப்ளேஸ்டோரில் பதிவேற்றப்பட்ட இந்த ஆட்வேர் செயலிகள் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. பழைய ஆண்ட்ராய்ட் பதிப்புகள் கொண்டு இயங்கும் சாதனங்களைத் தான் இந்த ஆட்வேர் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...