2019ம் ஆண்டிற்கான ’குளோபல் லீடர்ஷிப் அவார்ட்’ - கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை தேர்வு!

தொழில்நுட்பம்
Updated Jun 05, 2019 | 16:04 IST | Times Now

கூகுள் நிறுவனத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சியில் சுந்தர் பிச்சையின் பங்கு அளவிடமுடியாதது. மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் எதையும் கையாளும் பாங்கு அவரை உலக அரங்கில் மிளிர வைத்துள்ளது.

google, கூகுள்
சுந்தர் பிச்சை மற்றும் அடினா  |  Photo Credit: Twitter

நியூயார்க்: உலகளவிலான தலைமைப் பதவிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருதிற்கு (Global leadership award) கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, தேடுபொறிகளில் சிறந்து விளங்கும் கூகுள் நிறுவனத்தில் சி.இ.ஓவாக பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகின்றன. கடந்த 2015ம் ஆண்டு அவர் இந்தப் பதவியில் அமர்ந்தார்.

கூகுள் நிறுவனத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சியில் சுந்தர் பிச்சையின் பங்கு அளவிடமுடியாதது. மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் எதையும் கையாளும் பாங்கு அவரை உலக அரங்கில் மிளிர வைத்துள்ளது.

இந்நிலையில்தான், 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தை நாஸ்டாக்கின் தலைவரான அடினா ஃப்ரைட் மேன் என்னும் பெண்மணியும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

வாஷிங்டன்னை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில், இவர்கள் இருவரையும் இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் வர்த்தக உச்சி மாநாட்டில் இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

NEXT STORY
2019ம் ஆண்டிற்கான ’குளோபல் லீடர்ஷிப் அவார்ட்’ - கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை தேர்வு! Description: கூகுள் நிறுவனத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சியில் சுந்தர் பிச்சையின் பங்கு அளவிடமுடியாதது. மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் எதையும் கையாளும் பாங்கு அவரை உலக அரங்கில் மிளிர வைத்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola