போலி செய்திகள் பரவுவதை தடுக்க 'ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்

தொழில்நுட்பம்
Updated Mar 27, 2019 | 15:46 IST | Times Now

இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, வாட்ஸ் அப் மூலம் போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Whatsapp reminds users to
வாட்ஸ்அப்   |  Photo Credit: Times Now

டெல்லி: இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) என்ற புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது அவசியம்.  இந்தியாவில் நாடாளுமன்ற பொது தேர்தல் விரைவில் நடைபெற  இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் மூலம் போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப் நிறுவனம் இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்து மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவர் அபிஜித் போஸ் கூறுகையில்," தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் நோக்கம். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை எங்களால் அதிகப்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பார்வேர்டு செய்யப்படும் எஸ்எம்எஸ்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் பார்வேர்டு செய்யும் எஸ்எம்எஸ்சின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
போலி செய்திகள் பரவுவதை தடுக்க 'ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப் Description: இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, வாட்ஸ் அப் மூலம் போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola