திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்! என்ன பிரச்சனை ?

தொழில்நுட்பம்
Updated Jul 04, 2019 | 11:51 IST | Times Now

உலகெங்கும் சில இடங்களில் நேற்று பேஸ்புக்,வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.

Facebook
பேஸ்புக்  |  Photo Credit: Twitter

உலகமுழுவதும் நேற்று சில மணி நேரங்களுக்கு பேஸ்புக்,வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதிலும் பகிர்வதிலும் பிரச்சனை ஏற்படுவதாகவும், சில இடங்களில் செயலிகள் முற்றிலும் முடங்கிவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. 

தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமான வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம்  கலிபோர்னியா நகரை தலைமயமாக கொண்ட பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானவை. நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயனாளிகள் இந்த பிரச்சனை குறித்து புகார்களை எழுப்பினர். உலகில் வேறு சில பகுதிகளிலும் இந்த பிரச்னை நிலவியது. இந்நிலையில் ட்விட்டரில் இது குறித்து ட்வீட் செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று பேஸ்புக் நிறுவனம் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் செயலிகளில் புகைப்படங்கள் மற்றும் பிறவற்றை பதிவேற்றம் செய்வதிலும் அனுப்புவதிலும் பிரச்சனை உள்ளது என்பதை தாங்கள் அறிவதாகவும், இதற்காக தாங்கள் வருந்துவதகவும் இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 

 

பின்பு இன்று காலை பேஸ்புக் நிறுவனம் ட்விட்டரில் இந்த தொழில்நுட்ப கோளாறு முற்றிலுமாக சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தது. தற்போது பழையபடி பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பிரச்சனையின்றி செயல்படுவதாக தெரிய வருகிறது. எனினும் இந்த தொழில்நுட்ப கோளாறுக்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை. இதற்கு முன்னதாக மார்ச் மாதம் இதே போல் இந்த செயலிகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.      
 

NEXT STORY
திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்! என்ன பிரச்சனை ? Description: உலகெங்கும் சில இடங்களில் நேற்று பேஸ்புக்,வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola