சொல்லாமல் கொள்ளாமல் மூன்று மணி நேரம் முடங்கிய ‘ஃபேஸ்புக், இன்ஸ்டா’!

தொழில்நுட்பம்
Updated Apr 14, 2019 | 22:15 IST | Times Now

டெஸ்க்டாப்பில் மட்டும் முடங்கிய இந்தத் தளங்கள், மொபைலில் எந்தவித பாதிப்பும் இன்றி செயல்பட்டதும் அதிசயமாக பார்க்கப்பட்டது.

facebook, ஃபேஸ்புக்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்  |  Photo Credit: Twitter

சென்னை: உலகையே தன்னுள் கட்டிப்போட்டிருக்கும் பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸப் ஆகியவை திடீரென்று இன்று மீண்டும் மூன்று மணி நேரங்கள் செயலிழந்தன. இதனால் நெட்டிசன்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகினார்கள்.

இன்று மாலை 4 மணிமுதல் திடீரென்று இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் செயலிழந்தன இந்த சமூக வலைத்தளங்கள். உலகளவில் 10000க்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் திடீரென்று முடங்கியுள்ளது..பயன்படுத்த முடியவில்லை என புகார் செய்ததாக தெரிவித்தது டவுன் டிடெக்டர் என்கிற அமெரிக்க வலைத்தளம். அதிலும் குறிப்பாக அமெரிக்கா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில்தான் அதிக பயனாளர்கள் இந்த முடக்கம் பற்றி புகார் அளித்துள்ளனர். 

டெஸ்க்டாப்பில் மட்டும் முடங்கிய இந்தத் தளங்கள், மொபைலில் எந்தவித பாதிப்பும் இன்றி செயல்பட்டதும் அதிசயமாக பார்க்கப்பட்டது. கிட்டதட்ட மூன்று மணி நேர செயலிழப்புக்கு பிறகு, மீண்டும் இத்தளங்கள் நடைமுறையில் செயல்பாட்டுக்கு வந்தன. 

இந்த முடக்கத்தை தொடர்ந்து ட்விட்டரில் #FacebookDown என்கிற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டானது. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம்தான் ஃபேஸ்புக் மிக அதிக நேரத்திற்கு செயல் இழந்திருந்தது. அப்போது, கிட்டதட்ட 24 மணி நேரத்திற்கு முடங்கியிருந்தது ஃபேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
சொல்லாமல் கொள்ளாமல் மூன்று மணி நேரம் முடங்கிய ‘ஃபேஸ்புக், இன்ஸ்டா’! Description: டெஸ்க்டாப்பில் மட்டும் முடங்கிய இந்தத் தளங்கள், மொபைலில் எந்தவித பாதிப்பும் இன்றி செயல்பட்டதும் அதிசயமாக பார்க்கப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola