மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி

தொழில்நுட்பம்
Updated Sep 30, 2019 | 19:38 IST | Times Now

நந்தனம் மெட்ரோவில் பயணிகள் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரைவில் இந்த சேவை தொடங்கவுள்ளது.

நந்தனம் மெட்ரோவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி, EV Charger Facility at Nandanam Metro Station
நந்தனம் மெட்ரோவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீசஸ் லிமிடெட் (Energy Efficiency Services Limited) என்கிற மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் சேர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார கார்கள், பைக்குகள், மற்றும் ஆட்டோக்களை சார்ஜ் செய்யலாம். ELECTREEFI என்ற செயலி மூலம் பயணிகள் தாங்கள் சார்ஜ் செய்யும் நேரத்தை முன்பதிவும் செய்துகொள்ளலாம்.  

 

 

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை தொடர்ந்து அடுத்ததாக அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரைவில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது.மெட்ரோ நிலையங்கள் ஷேர் ஆட்டோ, கேப் வசதி உள்ள நிலையில் தற்போது இந்த இ.வி-சார்ஜ் வசதியும் சேர்ந்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறது. எனவே இந்த சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                 

 

NEXT STORY