ஆகஸ்டு 20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2! - இஸ்ரோ தலைவர் சிவன்

தொழில்நுட்பம்
Updated Aug 12, 2019 | 18:01 IST | Times Now

ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2, செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.

Chandrayaan 2 to reach Moon's orbit on August 20
சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆகஸ்டு 20 ஆம் தேதி சென்றடையும்  |  Photo Credit: Twitter

அகமதாபாத்: சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆகஸ்டு 20 ஆம் தேதி சென்றடைந்து செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சிவன், இரண்டு நாட்களில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் விலகும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2, செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று சிவன் தெரிவித்துள்ளார். ”ஜூலை 22ல் சந்திரயான் 2 ஏவப்பட்டதை அடுத்து இதுவரை 5 நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, விண்கலம் பூமியைச் சுற்றி வருகிறது,” என்றார் அவர்

புதன்கிழமை காலை மேற்கொள்ளப்பட இருக்கும் நகர்வு மிகவும் முக்கியமானதாகும். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஆகஸ்டு 14 ஆம் தேதி காலை 3.30 மணிக்கு டிரான்ஸ்-லூனார் இஞ்செக்‌ஷன் எனப்படும் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு இடம்பெயரும் நகர்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 20 ஆம் தேதி விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும். அடுத்தடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்,” என்றார். சந்திரயான் 2 திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், டிசம்பர் மாதத்தில் சிறிய ரக செயற்கைக் கோள்களை ஏவும் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

 

NEXT STORY
ஆகஸ்டு 20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2! - இஸ்ரோ தலைவர் சிவன் Description: ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2, செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...