தள்ளாடும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் - ஜூன் மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க திணறல்!

தொழில்நுட்பம்
Updated Jun 24, 2019 | 14:51 IST | Times Now

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட ரூபாய் 90,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாம்.

BSNL, பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்  |  Photo Credit: Twitter

டெல்லி: இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது ஊழியர்களுக்கு இந்தமாதம் வழங்க வேண்டிய சம்பளத்திற்காக மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது. 

மேலும், இந்நிறுவனம் தனது செயல்பாட்டை விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை நெருங்கிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளதும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட ரூபாய் 90,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாம். நாட்டிலேயே அதிக நஷ்டத்தை இதன் மூலம் சந்தித்த முதன்மை பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல் என்கிறது ஆய்வு ஒன்று.

மேலும், கடந்த 2018-19 வரையிலான காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கடன் 14 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாம். 2009ம் ஆண்டு வரையில் 500 கோடி வரையிலான லாபத்தை ஈட்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன்பிறகு தொடர் சரிவைச் சந்தித்துள்ளது. தனது 1.7 லட்சம் ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க திணறி வருகிறது.

இதனால் ஜுன் மாத ஊதியமாக கிட்டதட்ட ரூபாய் 850 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம், இல்லையெனில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது இயலாத காரியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
தள்ளாடும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் - ஜூன் மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க திணறல்! Description: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட ரூபாய் 90,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola