BSNL வழங்கும் புதிய 1,999 திட்டம்: தினமும் 33GB டேட்டா உடன் அன்லிமிடெட் அழைப்புகள்

தொழில்நுட்பம்
Updated Sep 09, 2019 | 15:47 IST | Times Now

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு போட்டியாக தற்போது பி.எஸ்.என்.எல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

BSNL, பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல் 

பாரத் ஃபைபர் சேவையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அதன்படி, ரூ.1,999 மதிப்பில் தினசரி 33GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு போட்டியாக தற்போது பி.எஸ்.என்.எல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள ரூ.849, ரூ.1,277, ரூ.2,499, ரூ.4,499, ரூ.5,999, ரூ.9,999, மற்றும் ரூ.16,999 திட்டங்களுடன் தற்போது புதிய ரூ.1,999 திட்டமும் வழங்கப்படும்.

புதிய ரூ.1,999 திட்டத்தில் நாளொன்றுக்கு 33GB வரை 100Mbps வேகத்திலும் 33GB டேட்டா தீர்ந்த பின்னர் 4Mbps வேகத்திலும் இணைய சேவை வழங்கப்படும். 33GB எனும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அன்லிமிடெட் திட்டமாகவே பி.எஸ்.என்.எல் இதனை விளம்பரப்படுத்தி வருகிறது.

முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் தனது பிராட்பேண்ட் திட்டங்கள் அனைத்தையும் தினசரி டேட்டா திட்டங்களாக மாற்றியது பி.எஸ்.என்.எல். டேட்டாவை தவிர புதிய ரூ.1,999 திட்டத்தில் அன்லிமிடெட் லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகள் செய்யலாம்.

NEXT STORY
BSNL வழங்கும் புதிய 1,999 திட்டம்: தினமும் 33GB டேட்டா உடன் அன்லிமிடெட் அழைப்புகள் Description: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு போட்டியாக தற்போது பி.எஸ்.என்.எல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola