ரியல்மீ 3, சாம்சங் M10, நோக்கியா, ஷியோமி...பத்தாயிரம் ரூபாய்க்குள் தற்போதைய பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

தொழில்நுட்பம்
Updated Mar 27, 2019 | 17:13 IST | Times Now

டாப் பிராண்டுகளும் தற்போது விற்பனையில் இருக்கும் 10,000 க்குள் இருக்கும் பட்ஜெட் மொபைல்களின் தொகுப்பு இங்கே.

Best mobile phones under Rs. 10,000
பத்தாயிரம் ரூபாய்க்குள் பெஸ்ட் ஸ்மார்ஃபோன்  |  Photo Credit: Getty Images

நாளொரு மாடலும் பொழுதொரு வேரியண்டுமாக தினம் தினம் புதுப்புது ஸ்மார்ட்ஃபோனை இறக்குகிறது மொபைல் கம்பெனிகள். நான்காயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் வரை மொபைல்ஃபோன்களுக்கு பஞ்சமில்லை. என்னதான் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன என்றாலும் ஒரு பத்தாயிரத்துக்காவது வாங்கினால்தான் கேமரா குவாலிட்டியும், டிஸ்ப்ளேவும் நன்றாக இருக்கிறது. அப்படி டாப் பிராண்டுகளும் தற்போது விற்பனையில் இருக்கும் 10,000 க்குள் இருக்கும் பட்ஜெட் மொபைல்களின் தொகுப்பு இங்கே.

Realme 3: ரியல்மீ 3 இந்தியாவில் 3 ஜிபி ராம், 32 ஜிபி ஸ்டோரேஜ் 8,999 க்கு கிடைக்கிறது. இதற்கு அடுத்த வேரியண்ட்டான 4 ஜிபி ராம், 64 ஜிபி 10,999. 6.22 இன்ச்சில் நாட்ச் டிஸ்ப்ளேவில் வருகிறது. இந்த பிராண்டில் Realme C1 2 ஜிபி ராம், 16 ஜிபி 6,999 க்கு கிடைக்கிறது.

Samsung Galaxy M10: சாம்சங் கேலக்ஸி எம்10 -ன்னின் 2ஜிபி ராம், 16 ஜிபி 7,990 க்கும் 3 ஜிபி ராம், 32 ஜிபி 8,990க்கும் கிடைக்கிறது. இதுவும் 6.22 இன்ச்சில் நாட்ச் டிஸ்ப்ளேவில் வருகிறது.

Vivo Y91i :  இந்த மாடல் போனும் 6.22 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளேதான். வீவோ ஒய் 91ஐ போனின் 2 ஜிபி ராம், 16 ஜிபி வேரியண்ட் 7,990 வுக்கும் இதே 2ஜிபி ராம், 32 ஜிபி வேரியண்ட் 8,490 வுக்கும் கிடைக்கிறது. 

Xiaomi Redmi Y2: டுயல் கேமராவுடன் 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜிபி ராம், 32 ஜிபி வேரியண்ட் 7,499 க்கு கிடைக்கிறது. 

Nokia 3.1 Plus: 13 மெகா பிக்சல் கேமராவுடன் 6.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இதன் விலை 9,999. இது 3 ஜிபி ராம், 32 ஜிபி வேரியண்ட்

Asus Zenfone Max M1: அசுஸ் ஜென்போனில் இந்த மாடலில் 3 ஜிபி ராம், 32 ஜிபி வேரியண்ட் 9,999 ரூபாய். இதன் டிஸ்ப்ளே 5.45 மற்றும் கேமரா 13- மெகாபிக்ஸல். இதே மாடல் 4 ஜிபி ராம், 64 ஜிபி வேரியண்ட் 11,999 ரூபாய்.

NEXT STORY
ரியல்மீ 3, சாம்சங் M10, நோக்கியா, ஷியோமி...பத்தாயிரம் ரூபாய்க்குள் தற்போதைய பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்! Description: டாப் பிராண்டுகளும் தற்போது விற்பனையில் இருக்கும் 10,000 க்குள் இருக்கும் பட்ஜெட் மொபைல்களின் தொகுப்பு இங்கே.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola