திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... பஜாஜ் சேட்டக் இப்போது எலக்ட்ரிக் அவதாரத்தில்!

தொழில்நுட்பம்
Updated Oct 17, 2019 | 12:52 IST | Times Now

ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 முதல் 95 கி.மீ வரை பயணம் செய்யலாம். ஸ்மார்ட்போனில் சேட்டக் செயலி மூலம் வாகனத்தின் மின்சார நிலவரம், பயண விவரம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.

Bajaj Chetak, பஜாஜ் சேட்டக்
பஜாஜ் சேட்டக்  |  Photo Credit: Twitter

புது டெல்லி: நடுத்தர வயதினருக்கு மலரும் நினைவுகளைக் கொணரும் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் தற்போது எலக்ட்ரிக் அவதாரம் எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ள பஜாஜ் நிறுவனம் பழைய சேட்டக் ஸ்கூட்டரை தூசி தட்டி, நவீன அம்சங்களை புகுத்தி, மின்சார ஸ்கூட்டராக மாற்றியுள்ளது. 

மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆகியோர் புதிய பஜாஜ் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள சேடக் ஸ்கூட்டர் புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு வருகிறது.

பழைய சேட்டக் ஸ்கூட்டரின் வடிவத்தில் காலத்திற்கேற்ப சில மாறுதல்களுடனும் நவீன வசதிகளுடனும் புதிய இ-ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள், அலாய் சக்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய சேட்டக் ஸ்கூட்டரின் உடற்பகுதி எஃகினால் செய்யப்பட்டதாகும்.

புதிய பஜாஜ் இ-ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் சேட்டக் செயலி மூலம் வாகனத்தின் மின்சார நிலவரம், பயண விவரம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.

New Chetak(Photo Credit: PTI)

ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 முதல் 95 கி.மீ வரை பயணம் செய்யலாம். புதிய சேட்டக் ஸ்கூட்டரின் விலை குறித்த விவரங்களை பஜாஜ் நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையிம், ரூ.1 லட்சம் முதல் இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEXT STORY