April Fool's Day 2019: கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாட்ஸ், ஓலா கழிப்பறை, நிறம் மாறும் ஷர்ட் !

தொழில்நுட்பம்
Updated Apr 01, 2019 | 13:39 IST | விபீஷிகா

ட்விட்டரில் பெரிய லெவலில் ஏப்ரல் ஃபூல் செய்யும் கம்பெனிகள்!

April Fool's Day 2019: Watch pranks
இதெல்லாம் பெரிய லெவல்  |  Photo Credit: Twitter

இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி, உலக முட்டாள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி நாட்களில் காலை எழுந்ததிலில் இருந்து, ஒவ்வொருவரையும் ஏமாற்ற நாம் பட்டப்பாடு...உஸ்ஸ்! இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றார்போல ஏமாற்றும் சுவாரஸ்யம் இந்த நாளுக்கு மட்டும்தானே? இதையே தங்களது ப்ராண்ட் ப்ரமோஷனாக மாற்றிக்கொள்கிறது கம்பனிகள். அதுவும் பெரிய பட்ஜெட்டில்.... 

பிரபல ஸ்மார்ட்போன் கம்பெனியான ஒன்ப்ளஸ் நிறுவனம், OnePlus 6T McLaren Edition போனில் வார்ப் சார்ஸ் என்ற டெக்னாலஜியை அறிமுகன் செய்தது. அதாவது அதிவேகமாக சார்ஜ் செய்யப்படும் டெக்னாலஜி, இதனால் போனும் சூடாகாது. அந்த டெக்னாலஜியிக் கொண்டு புதிதாக கார் உருவாக்கப்போவதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் ஏப்ரல் ஃபூல் ப்ராங்க் செய்துள்ளது. அதாவது போன் போலவே, அதிவேகமாக சார்ஜ் செய்யும் எலக்ரிக் காராம்!

 

 

அதேபோல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஸ்நாப்டீல், ரூபாய் 199-க்கு கலர் மாறும் சட்டையை அறிமுகம் செய்திருப்பதாக ப்ராங்க் செய்திருக்கிறது. உடனே அனைவரும் சன் டிவியில் மெல்லிசையே பாட்டில் மாறும் ஷில்பா செட்டி உடைபோல மாறும் என்றுதானே கற்பனை செய்திருப்பீர்கள்.... ஏமாத்திப்புட்டாங்க ப்ச்!

 

 

இவர்களையாவது மன்னித்துவிடலாம். ஒரு வாரமாய், கேப் கம்பெனியான ஓலாவோ புதிதாக ஓலா கழிப்பறையை உருவாக்கியிருப்பதாக பல விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. ஒரு ஏப்ரல் ஃபூலுக்கா பாஸ் இவ்ளோ செலவு பண்ணீங்க?

 

 

சர்வதேச கிரிக்கேட் அமைப்பான ஐசிசி #CricketNotAsYouKnowIt என்ற ஹேஸ்டேகில் வெயில் அதிகமாக இருப்பதால் கிரிக்கேட் வீரர்கள் இனி ஷாட்ஸ் போட்டுக்கொள்ளலாம், இரவு நேரங்களில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் ரன்கள் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என்று கிச்சுகிச்சு மூட்டி வருகிறது.

 

 

இதற்கு எதிர்பாறாய் நாங்க நல்ல பசங்க என்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நாங்கள் கஸ்டமர்களை ஏமாற்ற மாட்டோம் என்றும், ஊழியர்களும் அப்படி எந்த பயனாளர்களையும் ஏமாற்றக்கூடாது என்றும் கூறியிருக்கிறது. 

NEXT STORY
April Fool's Day 2019: கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாட்ஸ், ஓலா கழிப்பறை, நிறம் மாறும் ஷர்ட் ! Description: ட்விட்டரில் பெரிய லெவலில் ஏப்ரல் ஃபூல் செய்யும் கம்பெனிகள்!
Loading...
Loading...
Loading...