’என்னாது ரயில் பறக்குதா?’ பீதியில் ஆழ்ந்த அமெரிக்க மக்கள்!

தொழில்நுட்பம்
Updated Jun 04, 2019 | 15:06 IST | Times Now

அமெரிக்காவின் டெக்சாஸ், மிசிசிப்பி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கடந்த சில நாட்களாக இரவு நேர வானத்தில் தொடர்ச்சியாக ஒளிக்கோடுகள் போலவும், ரயிலில் விளக்கு ஒளிர்வது போலவும் பார்த்திருக்கிறார்கள்.

USA, அமெரிக்கா
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்  |  Photo Credit: Twitter

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் பல்வேறு இடங்களிலும் இரவு நேரத்தில் வானத்தில் ரயில் போன்ற ஒன்று ஊர்ந்து பறந்து செல்வதைப் பார்த்து மக்கள் பீதியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் டெக்சாஸ், மிசிசிப்பி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கடந்த சில நாட்களாக இரவு நேர வானத்தில் தொடர்ச்சியாக ஒளிக்கோடுகள் போலவும், ரயிலில் விளக்கு ஒளிர்வது போலவும் பார்த்திருக்கிறார்கள். வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்த இந்த காட்சி, தூரத்தில் செல்லும் ரயிலைப் பார்ப்பது போலவே இருந்ததாம். அதனால் பறக்கும் ரயில் என்றே மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

இன்னொரு பக்கம் வேற்றுகிரகவாசிகள் என்னும் புரளியும் பரவாமல் இல்லை. ஏனெனில், அமெரிக்கர்கள் யுஎஃப்ஓ போன்ற பறக்கும் தட்டுகள் குறித்த கதைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

 

 

இந்நிலையில்தான், மக்களின் பீதியை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் ரயில் குறித்த உண்மைத் தன்மையை வெளியிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் உலகமெங்கும் அதிவிரைவு இணைய சேவையை நிறுவ இருக்கிறது. 

அந்த புதிய திட்டத்திற்கு “ஸ்டார்லிங்க்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டதட்ட 12 ஆயிரம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன. அதில் முதல் கட்டமாக கடந்த வாரம் 60 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாம். அவைதான் ரயில்கள் போல ஒரே நேர்க்கோட்டில் சுற்றி வருகின்றனவாம். ஒருவழியாக இந்த செய்தி அறிந்தபிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டுள்ளனர் அமெரிக்க மக்கள். எனினும், நட்சத்திரங்கள் போல சுற்றித்திரியும் இந்த செயற்கைக்கோள்களால் வானவியல் ஆய்வாளர்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில், இது இயற்கைக்கு மாறாக நட்சத்திரங்களை ரசிக்கும் தன்மையை மாற்றிவிடும் என்று அவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
’என்னாது ரயில் பறக்குதா?’ பீதியில் ஆழ்ந்த அமெரிக்க மக்கள்! Description: அமெரிக்காவின் டெக்சாஸ், மிசிசிப்பி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கடந்த சில நாட்களாக இரவு நேர வானத்தில் தொடர்ச்சியாக ஒளிக்கோடுகள் போலவும், ரயிலில் விளக்கு ஒளிர்வது போலவும் பார்த்திருக்கிறார்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola