Facebook: 'ஸ்வைப் அண்ட் ரிப்ளை’ வாட்ஸப் போல பேஸ்புக்கில் ‘ஈசி’ வசதி!

தொழில்நுட்பம்
Updated Mar 25, 2019 | 10:54 IST | Times Now

வாட்ஸப்பில் செய்வது போல தேவையான குறுஞ்செய்தியை ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரம் அழுத்தும்போது, ரிப்ளை ஐகான் திரையில் தோன்றும். அதனை டேப்  (tab) அதாவது செலக்ட் செய்தி ரிப்ளை செய்ய முடியும்.

facebook, ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கில் புதிய வசதி - மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: உலகளாவிய அளவில் ரசிகர்களைக் குவித்து வைத்திருக்கும் சமூக வலைத்தளமான ‘ஃபேஸ்புக்’ தற்போது வாட்ஸப்பில் இருப்பது போல ‘ஸ்வைப் டூ ரிப்ளை’ ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸப் செயலியில் வருகின்ற குறுந்தகவல்களுக்கு அவற்றை ஸ்வைப் செய்வதன் மூலமாக உடனடியாக பதிலளிக்க முடியும். தவறுதலாக அனுப்பிய குறுந்தகவல்களை சில நிமிட கால அவகாசத்தில் அழிக்கவும் முடியும்.  குறிப்பிட்ட சில குறுஞ்செய்திகளுக்கு மட்டும் செலக்டிவ்வாக பதில் அளிக்க முடியும்.

இதுபோன்ற எளிதான பல அம்சங்கள் தற்போது பேஸ்புக்க்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த ‘ரிப்ளை’ பயன்பாடும். 

இதுவரையில் பேஸ்புக் சமூகவலைத்தளவாசிகள், பேஸ்புக் மெசஞ்சரில் குறுஞ்செய்தியை தொடர்ச்சியாக மட்டுமே அனுப்ப முடிந்தது. அதனால், எந்த மெசேஜ்க்கு எந்த பதில் என்பது பயனாளிகளைக் குழப்பி வந்தது.

ஆனால், தற்போதோ இது எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸப்பில் செய்வது போல தேவையான குறுஞ்செய்தியை ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரம் அழுத்தும்போது, ரிப்ளை ஐகான் திரையில் தோன்றும். அதனை டேப்  (tab) அதாவது செலக்ட் செய்தி ரிப்ளை செய்ய முடியும்.

குறிப்பாக, கூகுள் குரோம் வெர்ஷனில் பேஸ்புக்கினை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த வசதியை தற்போது உபயோகிக்க முடியும். 

மேலும், பயனாளர்கள் அனுப்பிய அல்லது வந்த செய்திகளுக்கு அருகில் மூன்று புள்ளிகள் தோன்றும். அதை அழுத்தினால் ரிப்ளை அல்லது ரிமூவ் என்கிற இரண்டு வழிமுறைகள் வரும். அவற்றில் எது தேவையோ அதை தேர்வு செய்துகொள்ள முடியும். ரிமூவ் ஆப்ஷன் மூலமாக பயனாளர்கள் அனுப்பிய தேவையில்லாத, தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்கலாம்.

மேலும், பேஸ்புக் ஸ்டோரியிலும் சில புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகள் தற்போது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் பகுதிகளில் சோதனை முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
Facebook: 'ஸ்வைப் அண்ட் ரிப்ளை’ வாட்ஸப் போல பேஸ்புக்கில் ‘ஈசி’ வசதி! Description: வாட்ஸப்பில் செய்வது போல தேவையான குறுஞ்செய்தியை ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரம் அழுத்தும்போது, ரிப்ளை ஐகான் திரையில் தோன்றும். அதனை டேப்  (tab) அதாவது செலக்ட் செய்தி ரிப்ளை செய்ய முடியும்.
Loading...
Loading...
Loading...