கூகுள் சர்ச்சில் ‘தானூஸ் கையுறை’ செய்யும் அட்டகாசம்! க்ளிக் செய்து பாருங்கள்!

தொழில்நுட்பம்
Updated Apr 26, 2019 | 14:32 IST | Times Now

அவெஞ்சர்ஸ் சீரிஸின் இறுதிப்பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரீலீஸுக்கான முன்னோட்டமாக இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கூகுளால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

avengers end game, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்   |  Photo Credit: Twitter

சென்னை: உலகமே ஆவலோடு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தின் ரீலீஸைக் கொண்டாடும் வகையில் கூகுள் ஒரு புதிய ஈஸ்டர் எக் சர்ப்ரைஸை தனது பக்கத்தில் வடிவமைத்து ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது. 

அவெஞ்சர்ஸ் சீரிஸின் இறுதிப்பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரீலீஸுக்கான முன்னோட்டமாக இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கூகுளால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு இந்த கதை எளிதில் புரியும். ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ என்னும் கடந்த பாகத்தில் அவெஞ்சர்ஸ் வில்லனான தானூஸிடம் எல்லா இன்பினிட்டி ஸ்டோன்களும் கிடைத்திருக்கும். கடைசியாக கிடைக்கும் விஷனின் இன்பினிட்டி ஸ்டோன் மூலமாக ஒரே ஒரு விரல் சொடுக்கில் தானூஸ், கேலக்ஸியின் பாதிக்கு பாதியை அழித்து துகள்களாக மாற்றிவிடுவார்.

Thanos

அதே டெக்னிக்கை தற்போது கூகுள் சர்ச்சில் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது கூகுள். கூகுள் சர்ச்சில் நீங்கள் ‘தானூஸ்’ (Thanos) என்று அவெஞ்சர்ஸ் வில்லனின் பெயரை சர்ச் செய்யும்போது, அதன் முடிவுகளைக் காட்டும் பக்கத்தில் மேல்புற வலது மூலையில் இன்பினிட்டி ஸ்டோன்கள் பதிக்கப்பட்ட தானூஸின் கையுறை சின்ன எமோஜியாக காணக்கிடைக்கும்.

அந்த கவுண்ட்லெட்டை நீங்கள் கிளிக் செய்யும்போது உங்கள் கூகுள் சர்ச்சின் பாதி ரிசல்ட்கள் துகள்களாக மாறி மறைகிறது. அதாவது கூகுள் சர்ச் ரிசல்ட் 90,700,000 என்றால், அதில் 45,350,000 ரிசல்ட்கள் 0.44 செகண்ட்களில் மறைந்துவிடும். மொபைல், கணினி இரண்டிலுமே இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸை ரசிக்க முடியும். 

ஆனால், இன்பினிட்டி வார் போல அல்ல. இதில், நீங்கள் மீண்டும் தானூஸின் கையுறையை க்ளிக் செய்தால் அழிந்த ரிசல்ட்கள் திரும்பி வந்துவிடும். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மீதான ரசிகர்களின் எக்கசக்க எதிர்ப்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில் இந்த ஸ்பெஷல் எமோஜியை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
கூகுள் சர்ச்சில் ‘தானூஸ் கையுறை’ செய்யும் அட்டகாசம்! க்ளிக் செய்து பாருங்கள்! Description: அவெஞ்சர்ஸ் சீரிஸின் இறுதிப்பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரீலீஸுக்கான முன்னோட்டமாக இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கூகுளால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola