தேர்தல் முடிவுகள் எதிரொலி: பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஈபிஎஸ் - ஓபிஎஸ்

பொது தேர்தல்கள் 2019
Updated May 23, 2019 | 16:57 IST | Times Now

300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  |  Photo Credit: Times Now

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே -19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தம் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் கூட்டணி 95-க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

 

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், " இந்த இமாலய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக உங்களுக்கு வாய்ப்பளித்து இந்நாட்டு மக்கள் கௌரப்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் தலைமையில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலி, "பிரமிக்கத்தக்க செயல்பாடு மூலம் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

NEXT STORY
தேர்தல் முடிவுகள் எதிரொலி: பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஈபிஎஸ் - ஓபிஎஸ் Description: 300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola