தென் சென்னை தொகுதியில் "பவர் ஸ்டார்" பெற்ற பவரான வாக்குகள் இதுதான்!

பொது தேர்தல்கள் 2019
Updated May 23, 2019 | 19:34 IST | Times Now

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Actor power star srinivasan, நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்   |  Photo Credit: Twitter

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பெற்ற வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே-18-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தற்போது வரை அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை வெற்றியை பதிவு செய்துள்ளார். பொள்ளாச்சி, நெல்லை, கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசிய கட்சி சார்பில் பவர் ஸ்டார் போட்டியிட்டார். அவருடன் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் களம் கண்டனர். திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த பவர் ஸ்டார் தேர்தல் களத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனால், தென் சென்னையில் அவர் தற்போது வரை பெற்றுள்ள வாக்குகள் 456.  இதனால் பவர் ஸ்டாருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் பவர் ஸ்டாருக்கு சாதரணமப்பா என ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். 

NEXT STORY
தென் சென்னை தொகுதியில் "பவர் ஸ்டார்" பெற்ற பவரான வாக்குகள் இதுதான்! Description: தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola