Lok Sabha Election 2019: விழுப்புரம் தொகுதி: பாமக ஜெயித்தால் அதிமுகவிற்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றி!

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 17:35 IST | Times Now

அதிகளவில் கரும்பு விவசாயத்தையும், கரும்பு தொழிற்சாலைகளையும் நம்பியிருக்கும் தொகுதி விழுப்புரம்.

election 2019, தேர்தல் 2019
விழுப்புரம் மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

விழுப்புரம்: பாமகVsவிசிகவாக இந்தமுறை அனல் பறக்கும் தொகுதி விழுப்புரம். 

விழுப்புரம் தனித் தொகுதியில் இத்தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களில் 7 பேர் அரசியல் கட்சி சார்ந்தும், 6 பேர் சுயேட்சையாகவும் உள்ளனர். இதில் முக்கிய கட்சிகளில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார், அஇஅதிமுக கூட்டணியில் பாமகவின் வடிவேல் ராவணன், மக்கள் நீதி மய்யத்தின் அன்பின் பொய்யாமொழி, அமமுக என்.கணபதி ஆகியோர் போட்டியில் உள்ளனர். 78.22% வாக்குகள் பதிவாகி உள்ள தொகுதி விழுப்புரம்.

விழுப்புரத்தில் கடந்த 2014ம் ஆண்டு அஇஅதிமுகவின் எஸ்.ராஜேந்திரன் 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,82,704. இரண்டாவது இடம் பிடித்த திமுகவின் கோ.முத்தையன் பெற்ற வாக்குகள் 2,89,337.

NEXT STORY
Lok Sabha Election 2019: விழுப்புரம் தொகுதி: பாமக ஜெயித்தால் அதிமுகவிற்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றி! Description: அதிகளவில் கரும்பு விவசாயத்தையும், கரும்பு தொழிற்சாலைகளையும் நம்பியிருக்கும் தொகுதி விழுப்புரம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola