Lok Sabha Election 2019: திருச்சி தொகுதி - 23 ஆண்டுகள் இடைவெளி..வெல்லுமா காங்கிரஸ்?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 16:25 IST | Times Now

தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் ஒருங்கே உள்ள தொகுதி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் இங்கு அதிகம்.

election 2019, தேர்தல் 2019
திருச்சி மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

திருச்சிராப்பள்ளி: தமிழகத்தின் மையமாக அமைந்துள்ளது மலைக்கோட்டை மாநகர் திருச்சி. முன்பு எம்.பி தொகுதியாக இருந்த புதுக்கோட்டையும், தற்போது திருச்சி தொகுதியின் கீழ்தான் வருகிறது. துப்பாக்கி தொழிற்சாலை, பெல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை அடக்கிய தொழில் நகரம் இது. 

காங்கிரஸ் திருநாவுக்கரசர், அமமுக சாருபாலா தொண்டைமான் என்று விஐபி வேட்பாளர்களைக் கொண்டுள்ளது இந்த தொகுதி. 

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில், 2019ம் ஆண்டுக்கான தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 15 பேர் சுயேட்சைகள், 9 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளகள். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக அஇஅதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் டாக்டர்.வி.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யத்தின் ஆன்ந்த்ராஜ், அமமுக சாருபாலா தொண்டைமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு வெற்றி பெற்றவர் அஇஅதிமுகவின் ப.குமார். இவர் 4,58,478 வாக்குகள் பெற்று 1,50,476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். திமுகவின் அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: திருச்சி தொகுதி - 23 ஆண்டுகள் இடைவெளி..வெல்லுமா காங்கிரஸ்? Description: தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் ஒருங்கே உள்ள தொகுதி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் இங்கு அதிகம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola