Lok Sabha Election 2019: பொள்ளாச்சி தொகுதி - வாக்குகளைப் பிரிக்குமா அமமுக, மநீம?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 16:35 IST | Times Now

பாலியல் குற்றச்சாட்டுகள் பொள்ளாச்சி தொகுதியை பரபரப்பாக வைத்திருந்தாலும், அது தேர்தல் முடிவுகளை எந்தளவிற்கு மாற்றும் என்பது தெரியவில்லை.

election 2019, தேர்தல் 2019
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

பொள்ளாச்சி: பொள்ளாச்சியும் ரிசர்வ் தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாறியது. திமுக இங்கு நேரடியாக அதிமுகவை எதிர்கொள்கிறது. கேரள எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் தென்னை மற்றும் தேங்காய் விவசாயம் அதிகம் நடக்கும் பகுதி. 

2019ம் ஆம் ஆண்டிற்கான 17வது மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 5 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பாகவும், 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியில் உள்ளனர். இதில் முக்கிய கட்சிகளின் சார்பில் திமுகவின் சண்முகசுந்தரம், அஇஅதிமுக மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகா, அமமுக முத்துக்குமார் ஆகியோர் களம் காண்கின்றனர். இத்தேர்தலில் 70.78% வாக்குகள் பொள்ளாச்சியில் பதிவாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் மகேந்திரன் 1,40,974 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,17,092. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி 2,51,829 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: பொள்ளாச்சி தொகுதி - வாக்குகளைப் பிரிக்குமா அமமுக, மநீம? Description: பாலியல் குற்றச்சாட்டுகள் பொள்ளாச்சி தொகுதியை பரபரப்பாக வைத்திருந்தாலும், அது தேர்தல் முடிவுகளை எந்தளவிற்கு மாற்றும் என்பது தெரியவில்லை.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola