Lok Sabha Election 2019: கள்ளக்குறிச்சி தொகுதி - வெற்றிக்கனியை பறிப்பாரா தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 18:03 IST | Times Now

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவதால் இங்கு போட்டி கொஞ்சம் அதிகம்தான்.

election 2019, தேர்தல் 2019
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

கள்ளக்குறிச்சி:  2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 பேர் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 18 பேர் சுயேட்சைகளாக களம் காண்கின்றனர். திமுகவின் கெளதம் சிகாமணி, அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், மக்கள் நீதி மய்யத்தின் கணேஷ், அமமுக கோமுகி மணியன் ஆகியோர் இங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள். மொத்த வாக்குப்பதிவு 78.38% ஆகும். 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அஇஅதிமுகவைச் சேர்ந்த க.காமராஜ் 2,23,507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்றிருந்த மொத்த வாக்குகள் 5,33,383. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் ரா.மணிமாறன் 3,09,876 வாக்குகள் பெற்றிருந்தார்.
 

NEXT STORY
Lok Sabha Election 2019: கள்ளக்குறிச்சி தொகுதி - வெற்றிக்கனியை பறிப்பாரா தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்? Description: விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவதால் இங்கு போட்டி கொஞ்சம் அதிகம்தான்.
Loading...
Loading...
Loading...