Lok Sabha Election 2019: திண்டுக்கல் தொகுதி - பாமக சார்பில் ஜோதிமுத்து..அமமுக சார்பில் ஜோதிமுருகன்!

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 16:14 IST | Times Now

கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இங்கு தனது வேட்பாளரை நேரடியாக களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

election 2019, தேர்தல் 2019
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் களத்தில் உள்ளார். தெருக்களைக் கூட்டுவது, தொகுதி பெண்களுக்கு சட்னி அரைத்துக் கொடுப்பது என மன்சூரின் பிரச்சார உத்திகள் வேறு லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 6 பேர் அரசியல் கட்சிகள் சார்பிலும், 15 பேர் சுயேட்சைகளாகவும் களத்தில் உள்ளனர். திமுகவின் வேலுசாமி, மக்கள் நீதி மய்யத்தின் சுதாகரன், பாமகவின் ஜோதிமுத்து, அமமுகவின் ஜோதிமுருகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட அஇஅதிமுக வேட்பாளர் எம்.உதயகுமார் 1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,10,462. இரண்டாவது இடம் பிடித்த திமுகவின் எஸ்.காந்திராஜன் 3,82,617 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: திண்டுக்கல் தொகுதி - பாமக சார்பில் ஜோதிமுத்து..அமமுக சார்பில் ஜோதிமுருகன்! Description: கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இங்கு தனது வேட்பாளரை நேரடியாக களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...
Loading...