Lok Sabha Election 2019: ஆரணி தொகுதி - செஞ்சி சேவலுக்கு இந்தமுறையும் கிட்டுமா வெற்றி?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 16:24 IST | Times Now

ஆரணி பட்டுக்கு மட்டுமின்றி அரிசி உற்பத்திக்கும் பேர் போனது. களம்பூரைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

election 2019, தேர்தல் 2019
ஆரணி மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

ஆரணி: பட்டுக்கு பேர்போன ஆரணியில், கடந்த தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஏழுமலை இந்தமுறையும் களத்தில் இருப்பது மற்ற கட்சிகளுக்கு கொஞ்சம் கிலியூட்டும் விஷயம்தான்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முக்கிய அரசியல் கட்சிகளின் 6 வேட்பாளர்களும், 9 சுயேட்சைகளும் இதில் அடக்கம். முக்கிய கட்சி வேட்பாளர்களாக அஇஅதிமுகவின் ஏழுமலை, காங்கிரஸின் விஷ்ணுபிரசாத், மக்கள் நீதி மய்யத்தின் ஷாஜி, அமமுகவின் செந்தமிழன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தமுறை இங்கு 78.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஆரணியில் கடந்த 2014ம் ஆண்டு, அஇஅதிமுகவின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை 2,43,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,02,721. அவரை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த திமுகவின் ஆர்.சிவானந்தம் பெற்ற வாக்குகள் 2,58,877.

NEXT STORY
Lok Sabha Election 2019: ஆரணி தொகுதி - செஞ்சி சேவலுக்கு இந்தமுறையும் கிட்டுமா வெற்றி? Description: ஆரணி பட்டுக்கு மட்டுமின்றி அரிசி உற்பத்திக்கும் பேர் போனது. களம்பூரைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...
Loading...