LIVE: வெற்றியை உறுதி செய்த வேட்பாளர்கள் இவர்கள்தான்!

பொது தேர்தல்கள் 2019
Updated May 24, 2019 | 08:05 IST | Times Now

வயநாட்டில் ராகுல், வாரணாசியில் மோடி உட்பல பலரது வெற்றி தற்போதே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Election Results Winners & Losers updates
Election Results Winners & Losers updates  |  Photo Credit: Times Now

17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 23  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 542 இடங்களில் 272 இடங்களை வெற்றி பெற்றால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் பா.ஜ.க பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. யார் யார் எங்கே தங்களது வெற்றியை உறுதி செய்திருக்கிறார்கள்...

3.00 am: இறுதியாக சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டனி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

11.14: அமேதியில் பாஜகவின் ஸ்மிரிதி இரானி, ராகுல் காந்தியைத் தோற்கடித்துள்ளார். 

11.13 pm: தூத்துக்குடியில் கனிமொழி, கன்னியாகுமரியில் வசந்தகுமார், நீலகிரியில் ஆ.ராசா, தருமபுரி செந்தில்குமார், கிருஷ்ணகிரி ஏ.செல்லக்குமார், தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

7.21 pm: மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

5.45 pm: காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சிக்பல்லாப்பூர் தொகுதியில் தோல்வி

5.40 pm: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குல்பர்காவில் தோல்வி

5.35 pm: மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தோல்வி

4.45 pm: கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுமலதா வெற்றி. முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா தோல்வி.

 

4.40 pm: 

  1. கேரளா வயநாட்டில் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி
  2. மோடி வாரணாசியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 
  3. திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி
  4. நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

மதியம் 2.30 வரையிலான நிலைமை இவை...

  1. வாரணாசியில் பிரதமர் மோடியின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 
  2. இந்த முறை வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாட்டில் நான்கு லட்சம் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அமேதியில் ஸ்மிரிதி இராணி முன்னிநிலையில் இருக்கிறார். 
  3. பீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருஹன் சின்ஹாவைத் தோற்கடித்து பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் வெற்றிபெற்றுள்ளார்.
  4. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
  5. காந்திநகரில் பாஜக தலைவர் அமித்ஷா ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இருப்பதால் அவருடைய வெற்றியும் உறுதியாகிவிட்டது.
  6. பாஜக வேட்பாளர் சன்னி தியோல் வெற்றிபெறும் நிலையில் இருக்கிறார். 
  7. காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் வெற்றி பெரும் நிலையில் இருக்கிறார். 
  8. பெரம்பலூரில் திமுக கட்சியின் பாரிவேந்தர் இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
  9. நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராஜாவின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டது.
  10. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டது.
  11. லக்னோவில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங்கின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
  12. கன்னியாகுமரியில் திமுக கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவருடைய வெற்றியும் உறுதி செய்யப்பட்டது.

முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள்

  1. கோவையில் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை
  2. தென்சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
  3. ஸ்ரீநகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஃபரூக் அப்துல்லா முன்னிலையில் உள்ளார். 
  4. கரூரில் திமுக கூட்டனி வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
  5. தமிழ்நாட்டில் தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் முன்னிலையில் உள்ளார்.
  6. சிதம்பரத்தில் திமுக கூட்டனி வேட்பாளர் திருமாவளவன் 900 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். எந்நேரமும் இங்கு முடிவு மாறலாம்.
  7. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
  8. சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்.

 

NEXT STORY
LIVE: வெற்றியை உறுதி செய்த வேட்பாளர்கள் இவர்கள்தான்! Description: வயநாட்டில் ராகுல், வாரணாசியில் மோடி உட்பல பலரது வெற்றி தற்போதே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!
Loading...
Loading...
Loading...