கோயம்பேட்டில் இறந்து கிடந்த மர்ம நபர்; எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுவிப்பு!

குற்றம்
Updated May 06, 2019 | 17:31 IST | Times Now

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, எழுத்தாளர் மற்றும் கவிஞர். நேற்று ஒரு ஷூட்டிங்கிற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு பிரான்சிஸ் வந்துள்ளார்.

chennai city, சென்னை
மாதிரிப்படம் 

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இறந்து கிடந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இறந்தவர் வலிப்பு நோயால் இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்ததால் பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டுள்ளார். 

நேற்று வணிகர் தினத்தை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கோயம்பேடு சந்தை ப்ளாக் 11ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகின் மற்றொருவர் அமர்ந்திருந்துள்ளார். 

இதைப்பார்த்த மூட்டைதூக்கும் தொழிலாளி ஒருவர் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் காவல்துறையின சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போதுதான் அவர் பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஆனால், இறந்தவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பல மாதங்களாக மனநிலம் பிறண்ட நிலையில் சுற்றித் திரிந்துள்ளார் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது. 

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, எழுத்தாளர் மற்றும் கவிஞர். நேற்று ஒரு படப்பிடிப்பிற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு பிரான்சிஸ் வந்துள்ளார். அப்போது, மேற்கண்ட நபர் வலிப்பு நோயால் துடிப்பதை பார்த்து அவருக்கு உதவியுள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டார். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையும் மேற்கண்ட நபர் வலிப்பு நோயால் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளதால் பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டுள்ளார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...