டெல்லியில் வீட்டு வேலைக்காகச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம்!

குற்றம்
Updated May 07, 2019 | 11:38 IST | Times Now

டெல்லியில் வீட்டு வேலை தருவதாகக் கூறி பெண்ணை வரவழைத்து 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

டெல்லியில் வீட்டு வேலைக்காகச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம்
டெல்லியில் வீட்டு வேலைக்காகச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம்  |  Photo Credit: Getty Images

டெல்லி: டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வேலை தருவதாகக் கூறி பெண்ணை வரவழைத்து 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள மூவரும், வாடகைக்கு வீடு எடுத்து, அந்த பெண்ணை அங்கு வரச்சொல்லி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், அந்த வீட்டிற்கு வேலைக்காக சென்றபோது, 2 பேர் ஏற்கனவே அங்கு இருந்துள்ளனர். அவர்கள் அளித்த பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை மூவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த  பின்னர், அருகிலிருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவர்கள் இருந்த முகவரி சரியாக தெரியவில்லை என்றபோதும், அந்த கட்டடத்தை அடையாளம் காட்டியதாகவும் டெல்லி கிழக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜஸ்மித் சிங் தெரிவித்துள்ளார். பின்னர், போலீசார் தனிப்படை அமைத்து, அந்த கட்டடத்தை கண்டுபிடித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, குர்ஹாமிலும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபர், கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த பெண்ணின் சகோதரிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் மானசேர் மாவட்டத்தில் உள்ள குக்ரோலா கிராமத்தில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வேலை குறித்து பேசுவதற்காக, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபரை சந்திக்கச் சென்றபோது, அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...