பெங்களூரு: சானிட்டரி நாப்கினில் போதைப் பொருள் கடத்திய பெண் கைது!

குற்றம்
Updated Jun 19, 2019 | 15:56 IST | Times Now

அந்தப் பெண்மணி ஒரு சானிட்டரி நாப்கின் பையில் சிறிய கேப்ஸ்யூல்களாக போதை மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்திருக்கிறார்.

woman hidden drugs in sanitary napkin
woman hidden drugs in sanitary napkin  |  Photo Credit: People

பெங்களூரு: கெம்பகௌடா விமான நிலையத்தில் போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதற்காக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கதாரில்  உள்ள தோஹாவுக்கு இந்த போதைப் பொருட்களை கடத்திச் செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இவர் சானிட்டரி நாப்கினில் இந்த போதைப் பொருட்களை வைத்துக் கடத்தியுள்ளார்.

இவருடன் இவர் மூலமாக இந்தக்கடத்தலை மேற்கொண்ட இருவரை போதைத் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, சுமார் 20 வயது ஒத்த அபு, மொஹ்மத் என்ற இருவர்தான் முக்கிய குற்றவாளிகள் எனத் தெரிவித்துள்ளது. இவர்கள் கேராளாவைச் சேர்ந்தவர்கள். இந்தக்கடத்தல் பற்றி போதைத் தடுப்பு அதிகாரிகளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே தகவல் கிடைத்துள்ளது. ஒருவாரமாக இவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து சுற்றி வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் விமான நிலையத்தில் தனது காரைப் பார்க்கிங் செய்தபோது போலீஸ் கைது செய்திருக்கிறது. அப்போது அந்தப் பெண்மணி ஒரு சானிட்டரி நாப்கின் பையில் சிறிய கேப்ஸ்யூல்களாக போதை மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்திருக்கிறார். கைது செய்த போலீஸ் அவரையும் அந்த சானிட்டரி நாப்கின் பையையும் பறிமுதல் செய்தது. 

இந்த மூவரையும் தவிர, இந்தக் குற்றத்துக்கு உதவி செய்ததாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஒரு வருடமாக இந்தக் கடத்தலை செய்துவந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் பெங்களூரு, மங்களூரு, கொச்சி விமான நிலையத்தில் இருந்து கடத்தல் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் ஆட்களை அனுப்பி பெங்களூருக்கு போதை வஸ்துக்களை கொண்டு வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

NEXT STORY
பெங்களூரு: சானிட்டரி நாப்கினில் போதைப் பொருள் கடத்திய பெண் கைது! Description: அந்தப் பெண்மணி ஒரு சானிட்டரி நாப்கின் பையில் சிறிய கேப்ஸ்யூல்களாக போதை மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்திருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola