'மேஜிக் வாய்ஸ் கால் ஆப்' மூலம் பெண் குரலில் போனில் பேசி நகை, பணம் கொள்ளை !

குற்றம்
Updated May 04, 2019 | 17:48 IST | Mirror Now

மொபைல் போன் மூலம் பெண் குரலில் பேசி பணம், நகைகளை திருடிய இரண்டு பேரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

Representative Image
Representative Image  |  Photo Credit: Getty Images

விருதுநகர்: சமூக வலைதளம் மற்றும் மொபைல் போனில் பெண் குரலில் பேசி நூதன முறையில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களை சாத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் சமூக வலைதளம் மற்றும் மொபைல் போன் மூலம் வசதி படைத்த பெண்களை சிலர் தொடா்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் பெண் குரலில் பேசி நட்பாக பழகியுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனா். பெண்களிடம் பேசிய நபர்கள் நூதன முறையில் பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாாின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்களின் செல்போன்களை வாங்கி அவர்களிடம் பேசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்ததில், சாத்தூா் பெரியார் நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜ்குமார் மற்றும் அமீர்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில், வசதி படைத்த பெண்களிடம் போனில், மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் பேசுவோம். வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் நகைகளை கோயிலில் வைத்து பூஜை செய்தால் நல்லது நடக்கும் என்று கூறி நகைகளை திருடுவோம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 61 சவரன் நகை மற்றும் ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...