தெலங்கானா: பெண் அதிகாரியைத் தாக்கிய எம்.எல்.ஏவின் தம்பி - வீடியோ

குற்றம்
Updated Jun 30, 2019 | 14:44 IST | Times Now

ஒரு எம்.எல்.ஏவின் தம்பி, பெண் என்று பாராமல் அரசு அதிகாரியை சரமாரியாகத் தாக்கியது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. 

TRS workers attacked Police and woman forest guard in Telangana - video
TRS workers attacked Police and woman forest guard in Telangana - video  |  Photo Credit: ANI

தெலங்கானாவில் நேற்று அனிதா என்ற வனத்துறை அதிகாரியை டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ கொணப்பாவின் தம்பி சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரிதா ஹாரம் மரம் நடும் திட்டத்தின் படி மரம் நடுவதற்காக வனத்துறை அதிகாரியான அனிதா, தெலங்கானா மாநிலத்தின் சிர்பூர் பகுதியில் உள்ள சரசலா கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கே தன்னுடன் 20 அதிகாரிகளுடன் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் மரம் நடுவதற்காக முயற்சிகளில் ஈடுபட்ட போது, அங்கிருந்த மக்கள் இவையெல்லாம் தங்களுடைய இடம் என்று மரம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சிலர் கொனெரு கிருஷ்ணா ராவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தனது ஆட்களுடன் வந்த கிருஷ்ணா ராவ் அங்கிருந்த அதிகாரிகளை உடனடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். உடனே செய்வதறியாமல் தவித்த அனிதா அருகில் இருந்த ட்ராக்ட்டரில் ஏறியுள்ளார். அப்போது பெரிய கம்பைக் கொண்டு அவரது தலையில் ஓங்கி பல முறை அடித்துள்ளார் கிருஷ்ணா ராவ். இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறியதாவது கிருஷ்ணா ராவ் வந்தவுடன் எதற்கு என்னவென்று ஒரு கேள்விகூட கேட்காமல் திடீரென்று அடிக்கத் துவங்கிவிட்டார். ஒரு அதிகாரியைக் கூட பேசவே விடவில்லை. அவர்கள் அங்கிருக்கும் அரசுக்குச் செந்தமான நிலத்தில் மரம் நடுவதற்கு சென்றுள்ளனர். ஒரு பெண் என்று கூடப்பார்க்கமால் இவ்வாறு கிருஷ்ணாராவ் தாக்கியுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.   

 

 

அனிதாவைத் தாக்கிய கிருஷ்ணா ராவ், தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் சிர்பூர் எம்.எல்.ஏவான கொணப்பாவின் தம்பி ஆவார். ஒரு எம்.எல்.ஏவின் தம்பி பெண் என்று பாராமல் அரசு அதிகாரியை சரமாரியாகத் தாக்கியது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. 

NEXT STORY
தெலங்கானா: பெண் அதிகாரியைத் தாக்கிய எம்.எல்.ஏவின் தம்பி - வீடியோ Description: ஒரு எம்.எல்.ஏவின் தம்பி, பெண் என்று பாராமல் அரசு அதிகாரியை சரமாரியாகத் தாக்கியது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola