திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

குற்றம்
Updated Oct 04, 2019 | 10:53 IST | Times Now

மணிகண்டன் வைத்திருந்த பெட்டியில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த பார்கோடுகளை சோதித்ததில் அவை லலிதா ஜுவல்லரியில் இருந்து திருடப்பட்டது உறுதுயானது.

Manikandan held in Trichy jewellery shop theft, திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டன்
திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டன்  |  Photo Credit: Twitter

திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையான சம்பவத்தில் கொள்ளையடித்த ஒருவர் திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றொரு கொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிசிடிவி காட்களில் பதிவானது. இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைத்து காவல்துறைனர் தேடிவந்தனர். 

திருச்சியை சுற்றியுள்ள பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவலர்கள் தேடி வந்த நிலையில், நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் திருவாரூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவலர்களை கண்டு நிற்காமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற காவலர்கள் மடப்புரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் காவலர்களிடம் சிக்கினார்.

மணிகண்டன் வைத்திருந்த பெட்டியில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த பார்கோடுகளை சோதித்ததில் அவை லலிதா ஜுவல்லரியில் இருந்து திருடப்பட்டது உறுதுயானது. திருவாரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் பிறகு விசாரணைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டார். தப்பியோடிய சுரேஷ் மற்றும் அவனது உறவினர் முருகன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...