திருப்பதி: போதையில் விளையாட்டாக தூக்கு போட்டு விளையாடியவர் பலி

குற்றம்
Updated Apr 23, 2019 | 13:24 IST | டைம்ஸ் நவ் தமிழ்

எந்த ஆப்ஸினாலும் உயிர் போவதில்லை, நம்மளால்தான் போகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு  உதாரணம். 

hanging
தூக்கிட்டு தற்கொலை  |  Photo Credit: Getty Images

இளைஞர் ஒருவர் குடிபோதையில் விளையாட்டாகத் தூக்கில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோகால் செய்ய இடறி உண்மையிலேயே பரிதாபமாக உயிர்இழந்தார்.

திருப்பதியை அடுத்த திருச்சானூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ஒரு கார் மெக்கானிக். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வேலைமுடித்து வந்த சங்கர், நன்றாக குடித்துவிட்டு தனது நண்பருக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். சும்மா போன் செய்திருந்தால் பரவாயில்லை. வீட்டில் இருந்த புடவையைக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டே விளையாடியுள்ளார். அதில் தான் சாகப்போகிறேன் என்றும் கூற, பதறிப்போன நண்பர் வேண்டாம்  இந்த விளையாட்டு என்று எச்சரித்துள்ளார். 

அப்போது காலைத் தூக்கி பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்த சங்கர், இறக்கும்போது நிலை தடுமாறி கட்டிலில் இருந்து விழுந்துள்ளார். இதில் கழுத்தில் சுருக்கு இறுக்கமாகியுள்ளது. அவர் உடனே சுதாரித்துக்கொண்டு காலை கட்டிலில் வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் போதையில் இருந்ததால் அவரால் நிதானமாக காலை கட்டிலில் வைக்க முடியவில்லை. பதற்றமடைந்த நண்பர் உடனே சங்கரின் பெற்றோருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். விஷயம் அறிந்த பெற்றோர் கதவை உடைத்து சங்கரை மீட்பதற்குள் சங்கரின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது. தகவல் அறிந்த போலீசார் சங்கரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து, பிரேதப்பரிசோதனைக்குப் பின் சங்கரின் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.

டிக்டாக்கில் தான் இப்படி விபரீதமாக விளையாடி உயிரை விடுகிறார்கள் என்று ஆப்ஸை தடை செய்யக் கோரினர் சிலர். ஆனால் எந்த ஆப்ஸினாலும் உயிர் போவதில்லை, நம்மளால்தான் போகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு  உதாரணம். 

NEXT STORY
திருப்பதி: போதையில் விளையாட்டாக தூக்கு போட்டு விளையாடியவர் பலி Description: எந்த ஆப்ஸினாலும் உயிர் போவதில்லை, நம்மளால்தான் போகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு  உதாரணம். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola