வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி இருவர் பலி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

குற்றம்
Updated May 03, 2019 | 16:31 IST | Times News

சென்னையில் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது

villivakkam accident
வில்லிவாக்கம் விபத்து  |  Photo Credit: Twitter

சென்னை வில்லிவாக்கத்தில் இன்று குடிபோதையில் காரை ஓட்டிய நபரால் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதன் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை உறையவைப்பதாய் இருக்கிறது. 

மண்ணடியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் சிவப்பு நிற இன்னோவா காரில் காலை சென்னை வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்துக்கு கீழ் சென்றுகொண்டிருந்தவர் காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அப்போது அங்கே டீக்கடையில் நின்றிருந்த 65 வயது மூதாட்டி சரசா மற்றும் 40 வயதுள்ள மோகன் இருவரின் மீதும் காரை மோதிவிட்டு நிற்காமல் அன்னை சத்யா நகருக்குள் கார் நுழைந்திருக்கிறார். பொதுமக்கள் அனைவரும் காரை  விரட்டிப்பிடிக்க வந்ததால் கார் இன்னும் வேகமாகச் செல்ல எதிரே 50 வயது ஆதிலட்சுமி காரில் அடித்து இழுத்துச்செல்லப்பட்டார். 

 

பின் மின் கம்பத்தில் மோதிய காரை பொதுமக்கள் சுற்றிவளைக்க அதில் இருந்த இருவரும் தப்பி ஓடினர். ட்ரைவர் தேவேந்திரனை மக்கள் அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது கொலை வழக்குப் போடப்பட்டிருக்கிறது. தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த விபத்தில் சரசாவும் மோகனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆதிலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அடித்ததால் ட்ரைவருக்கும் சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. சென்னையில் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...