’3 குழந்தைகளை விற்றுள்ளேன்’ - கைதான செவிலியர் அமுதா வாக்குமூலம்!

குற்றம்
Updated Apr 25, 2019 | 18:16 IST | டைம்ஸ் நவ் தமிழ்

பச்சிளம் குழந்தைகளை காய்கறி விற்பதுபோல ஒரு செவிலியரே அதுவும் 30 ஆண்டுகளாக விற்பனை செய்துவந்துள்ளது ராசிபுரத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை
30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை 

ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அந்த பெண்ணின் பெயர் அமுதா. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்ற ஒரு செவிலியர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிப்பவர். அவரது கணவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். அந்த போன் ஆடியோவில் மறுமுனையில் சதீஷ் என்பவர் தருமபுரியில் இருந்து தனக்கு குழந்தை வேண்டும் என்று கேட்டு போன் செய்கிறார். அவர் விலை பற்றி கேட்க, அமுதா கூறும் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். ஆண் குழந்தைக்கு இவ்வளவு, பெண்குழந்தைக்கு இவ்வளவு, அதிலும் ஆரோக்யமாக மட்டும் என்றால் ஒரு விலை, குழந்தை அமுல்பேபி போல இருந்தால் ஒரு விலை, கறுப்பாக இருந்தால் கம்மி விலை எனப் பட்டியல் போடுகிறார் அமுதா. 

பெண் குழந்தகைள் 2 லட்சத்தில் இருந்து மூன்றரை வரையிலும் ஆண் குழந்தைகள் நான்கரை லட்சம் வரையிலும் என்று கூறும் அமுதா, முன்பணமாக ஒரு இரண்டரை லட்சத்தைக் கொடுத்துவிட்டால் குழந்தை வருவதைப் பொருக்கு விலையை அப்போது நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிறார். மேலும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் குழந்தை வந்தவுடன் தானே வீட்டில் வைத்துப் பராமரித்துக் கொள்வதாகவும் அவர்கள் எப்போது முழு தொகையைத் தயார் செய்கிறார்களோ அப்போது வந்து குழந்தையை வீட்டில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பக்காவாக மார்கெட்டிங் செய்கிறார். 

அவர் பேசும்போது ஒரு ட்ரஸ்ட் பற்றியும் பேசுகிறார். அதாவது அந்த ட்ரஸ்ட் மூலமாகத்தான் நீங்கள் பேசுகிறீர்களா என்று. அவர் பேசுவதைப் பார்த்தால் ட்ரஸ்டுக்கு வருபவர்களை அங்கிருப்பவர்கள் குழந்தை வேண்டுகிறார்கள் என்பதை அனுமானித்து இவர் பற்றிக் கூறிப் பேசச் சொல்லி இருப்பார்கள் போலும். இவற்றுடன் ரூபாய் 70 ஆயிரம் கொடுத்தால் மருத்துவமனையிலேயே அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்றே பிறப்பு சான்றிதழை மாற்றித் தருவதாகக் கூறியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படி என்றால் அங்கே ஒரு நெட்வொர்க்கே இந்தக் குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருக்கிறா என்று சந்தேகம் எழுகிறது. பணத்தைக் கொடுத்துவிட்டால் அங்கே ஆள் இல்லாத சமயத்தில் கம்ப்யூட்டரில் டேட்டாவை மாற்றிவிடலாம் என்றும் அதற்கு 25 நாட்கள் முதல் 30 நாள் வரை அவகாசம் வேண்டும் என்றும் கூறுகிறார். 

தற்போது இந்த ஆடியோவை வைத்து சுகாதரத்துறை செயலாளர் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். சுகாரத்துறை அதிகாரிகள் ராசிபுரம் காவல்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அமுதா தலைமறைவாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பச்சிளம் குழந்தைகளை காய்கறி விற்பதுபோல ஒரு செவிலியரே அதுவும் 30 ஆண்டுகளாக விற்பனை செய்துவந்துள்ளது ராசிபுரத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைதாகியுள்ள அமுதா, இதுவரை 3 குழந்தைகளை விற்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

NEXT STORY
’3 குழந்தைகளை விற்றுள்ளேன்’ - கைதான செவிலியர் அமுதா வாக்குமூலம்! Description: பச்சிளம் குழந்தைகளை காய்கறி விற்பதுபோல ஒரு செவிலியரே அதுவும் 30 ஆண்டுகளாக விற்பனை செய்துவந்துள்ளது ராசிபுரத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola