பாரிமுனையில் இளைஞர் ஒருவரை நடுரோட்டில் அடித்த கும்பல்

குற்றம்
Updated Jul 22, 2019 | 17:03 IST | Times Now

பட்டப்பகலில் உயர்நீதிமன்றம் இருக்கும் சாலையில் ரௌடிகள் ஒருவரை ஓட ஓட விரட்டிப் பிடித்து அடித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Shocking: Man attacked by a gang in nsc bose road parrys
Shocking: Man attacked by a gang in nsc bose road parrys  |  Photo Credit: Twitter

கஞ்சா புகைத்ததை போலீசாரிடம் கூறியதால் இளைஞரை பாரிமுனை சாலையில் ரௌடிகள் ஓட ஓட அடித்தனர். 

சென்னை பாரிமுனையில் ஆட்டோவுக்குள் ராபர்ட், தீனா என்ற இருவர் கஞ்சா புகைத்துள்ளனர். இதனைப் பார்த்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது சுல்தான் என்பவர் அருகில் இருந்த காவலரிடம் கூறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த இருவரும் இன்று காலையில் நடுரோட்டில் என்.எஸ்.சி போஸ் சாலையில் சுல்தானை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

சிக்னலில் அனைவருமே செய்வதறியாது திகைத்து நின்றுப் பார்க்க இருவரும் இவரை விடாமல் துரத்தி துரத்தி அடிப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சுல்தான் நடந்த விஷயங்களைக் கூறி போலீசில் புகார் தெரிவித்தார். உடனே இவரது புகாரை வைத்து சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பூக்கடைக் காவல்துறை அதிகாரிகள், அவர்கள் இருந்த ஆட்டோவின் நம்பரை வைத்து குற்றவாளிகளை கண்டறிந்தனர். விசாரித்ததில் கண்ணகி நகரில் வசிக்கும் ராபர்ட், தீனா என்பது தெரியவந்ததும் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் உயர்நீதிமன்றம் இருக்கும் சாலையில் ரௌடிகள் ஒருவரை ஓட ஓட விரட்டிப் பிடித்து அடித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...