ஆர்எஸ்எஸ் நிர்வாகி, கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் வீட்டில் கொடூரமாக கொலை!

குற்றம்
Updated Oct 10, 2019 | 16:03 IST | Times Now

ஆர்எஸ்எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் ஆகிய மூவருமே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

ஆர்எஸ்எஸ் நிர்வாகி,கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் வீட்டில் கொலை,RSS worker, his pregnant wife, 8-year old son brutally murdered in Murshidabad
ஆர்எஸ்எஸ் நிர்வாகி,கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் வீட்டில் கொலை  |  Photo Credit: Twitter

கொல்கத்தா: ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள முர்ஸிடபாத் மாவட்டத்தில் பந்து பிரகாஷ் லால் (35)  என்பவர் தன் மனைவி பியூட்டி மோண்டல் பால் (30) மற்றும் மகன் அங்கன் (6) உடன் வசித்து வந்தார். இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அவரும் அவரது குடும்பத்தினரும் விஜயதசமி பூஜையில் பங்கேற்காததால் அப்பகுதியினர் அவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் பிரகாஷ் லால், 8-மாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் மகன் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த தகவலை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு விசாரணையில் மூவரும் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மகனின் ரத்தத்தை கட்டுப்படுத்த ஒரு துணியும் போர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கொடூரக் கொலையை செய்தவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். இறுதியாக அப்பகுதியினர் பந்து பிரகாஷ் லாலை 8-ஆம் தேதி காலை மார்க்கெட்டுக்கு சென்று வரும்போது பார்த்ததாகவும், அதன் பிறகு 1 மணி நேரத்துக்குள் குடும்பத்தினர் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் ஆதாயம் எதுவம் உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவத்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலரும் மேற்குவங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.                 
    

NEXT STORY