பல்லாவரத்தில் மூத்த அதிகாரியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்

குற்றம்
Updated Aug 27, 2019 | 15:39 IST | Mirror Now

பல்லாவரம் ராணுவக் குடியிருப்பில் தனது மேல் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ரைஃபிள் மேன் ஒருவர்.

Rifle man killed an Army officer and commit suicide in chennai Pallavaram
பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை  |  Photo Credit: Getty Images

பல்லாவரம்: சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவக் குடியிருப்பில் தனது மூத்த ராணுவ அதிகாரியை சுட்டுக் கொலை செய்து, தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு வீரர். இந்த சம்பவம் சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சென்னை, பல்லாவரத்தில் ராணுவக் குடியிருப்பு உள்ளது. இங்கெ உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ப்ரவீன் குமார் ஜோஷி ஹவில்தார் வசித்து வருகிறார். இவருக்கு கீழே ரைஃபிள் மேனாக ஜெக்தீர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் ப்ரவீன் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு ப்ரவீன் குமாருக்கும் ஜெக்தீருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ப்ரவீன் குமார் ஜெக்தீரை மிகவும் கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெக்தீர் ஆத்திரத்தில் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த ப்ரவீன் குமாரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். 

நள்ளிரவில் துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு உடனே குடியிருப்பில் உள்ளவர்கள் பிரவீன்குமாரின் படுக்கை அறைக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கே ப்ரவீன் குமார் மட்டுமல்லாமல் ஜெக்தீரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  ப்ரவீன் குமாரைக் கொன்று விட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஜெக்தீர். இருவருமே சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். செய்தி தெரிந்ததும் பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். ராணுவ அதிகாரியும் ரைஃபிள் மேனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...