அக்காவுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்துக் கொன்ற மனைவி, புதுச்சேரி பயங்கரம்!

குற்றம்
Updated May 10, 2019 | 15:56 IST | Mirror Now

ஸ்டெல்லாவும் ரெஜினாவும் சேர்ந்து ஜூஸில் கமலக்கண்ணனுக்கு விஷம் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

crime
கொலை  |  Photo Credit: Getty Images

கடந்த 6-ஆம் தேதி புதுச்சேரி 100 அடி சாலையில் கமலக்கண்ணன் என்பவர் கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மனைவி, விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்துள்ளது. போலீஸார் அவரது மனைவி ஸ்டெல்லாவைக் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

35 வயதான கமலக்கண்ணன் லாரி ஓட்டுநராக இருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவருக்கும் ஸ்டெல்லாவுக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பெரியார்நகரில் வசித்து வருகிறார்கள். இவரின் குடிப்பழக்கத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அவர் ஸ்டெல்லாவை அடித்துத் துன்புறுத்துவதாகத் தெரிகிறது. இதனால் ஸ்டெல்லா  கோவித்துக்கொண்டு பிள்ளை சாவடியில் உள்ள தனது அக்கா ரெஜினாவின் விட்டுக்குச் சென்றுவிட்டார். 

அங்கும் கமலக்கண்ணன் வந்து தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் ஸ்டெல்லாவும் ரெஜினாவும் சேர்ந்து ஜூஸில் கமலக்கண்ணனுக்கு விஷம் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் இறக்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெஜினாவின் நண்பரான பிரபல ரௌடி தமிழ்ம்மணியிடம் உதவி கேட்டுள்ளனர். 

தமிழ்மணி வீட்டுக்கு வந்து கமலக்கண்ணனை கழுத்தை நெறித்துக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தூக்கிப்போட்டுள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணை அனைத்தையும் ஸ்டெல்லாக் கூறியுள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் ரெஜினாவையும் தமிழ்மணியையும் போலீஸார் தேடி வருகின்றனர். 


 

NEXT STORY
அக்காவுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்துக் கொன்ற மனைவி, புதுச்சேரி பயங்கரம்! Description: ஸ்டெல்லாவும் ரெஜினாவும் சேர்ந்து ஜூஸில் கமலக்கண்ணனுக்கு விஷம் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola