தூத்துக்குடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்!

குற்றம்
Updated Sep 23, 2019 | 20:54 IST | Mirror Now

பட்டப்பகலில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Polytechnic student hacked to death in Tuticorin
Polytechnic student hacked to death in Tuticorin  |  Photo Credit: Twitter

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சந்தையடியூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யூ (19). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று வழக்கம் போல் மதிய உணவிற்காக தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் ரயில்நிலையம் அருகே சென்ற போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மேட் அணிந்து வந்த கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்திகளால் சரமாரியாக வெட்ட முயற்சி செய்தது. 

பதறிப் போன அபிமன்யூ, இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய அந்த கும்பல் அபிமன்யூவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அபிமணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிமணியின் உடலை கைப்பற்றி கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி அருகே பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. எனினும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. 

NEXT STORY