உண்டியல் வைத்து பணம் வசூலித்த ஜீவ சமாதி சாமியார் மீது வழக்குப்பதிவு

குற்றம்
Updated Sep 16, 2019 | 18:06 IST | Times Now

ஜீவசமாதி அடையப்போவதாக கடந்த 13-ஆம் தேதி பொதுமக்கள் மத்தியில் அமர்ந்த இருளப்பசாமி, விடியும் வரை காத்திருந்து காலம் கடந்துவிட்டதாகக் கூறிக் கிளம்பிச் சென்றார்.

Godman Irulappasamy, சாமியார் இருளப்பசாமி
சாமியார் இருளப்பசாமி  |  Photo Credit: YouTube

சிவகங்கை: ஜீவசமாதி அடையப் போவதாக ஏமாற்றி பொது மக்களிடம் உண்டியல் வசூல் செய்ததாக சாமியார் இருளப்பசாமி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கையை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் 77 வயதாகும் இருளப்பசாமி. இவர், தான் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறி கடந்த 13-ஆம் தேதி பொதுமக்கள் மத்தியில் அமர்ந்தார். அவர் சமாதி அடைய குழி தோண்டப்பட்டு இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனை காண ஏராளமான மக்கள் அங்கு கூடியிருந்தனர். 

இதனை தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருளப்பசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜீவசமாதி அடையும் முடிவை கைவிடுமாறு வலியுறுத்தினர். இருப்பினும், இருளப்பசாமி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் காலை திடீரென இருளப்பசாமி தான் ஜீவசமாதி அடையும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். காலம் கடந்துவி ட்டதால் வேறொரு நாளில் ஜீவசமாதி அடைவதாகவும் கூறிவிட்டு கிளம்பினார்.

இந்நிலையில், ஜீவசமாதி அடையப் போவதாக ஏமாற்றி பொது மக்களிடம் உண்டியல் வசூல் செய்ததாக சாமியார் இருளப்பசாமி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

NEXT STORY